உக்ரைன் பதற்றம்: சிங்கப்பூர் பதிவு பெற்ற கப்பல்களுக்கு MPA எச்சரிக்கை!

உக்ரைன் மோதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பதற்றம் இருக்கும் பட்சத்தில் சிங்கப்பூர் பதிவு பெற்ற கப்பல்கள் அங்கு செல்ல வேண்டாம் என சிங்கப்பூர் கடல் மற்றும் துறைமுக ஆணையம் (MPA) ஆலோசனை வழங்கியுள்ளது.

கப்பல் இயக்குனர்களைத் தொடர்பு கொண்ட ஆணையம், தேவைப்பட்டால் அந்த பகுதிகளில் வர்த்தகத்தைத் தவிர்ப்பது உட்பட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை வழங்கியுள்ளது.

ஊழியர் பற்றாக்குறை… கட்டுமான, கடல் துறை Work permit ஊழியர்களின் நுழைவு நடைமுறை எளிமை! – செய்ய வேண்டியது என்ன?

அதாவது குறிப்பாக கருங்கடல் மற்றும் அசோவ் கடலின் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்று MPA கூறியுள்ளது.

கருங்கடல் மற்றும் அசோவ் கடல் பகுதிகளை உக்ரைன் மற்றும் ரஷ்ய கப்பல்களும் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது.

மார்ச் 5, 2022 நிலவரப்படி, சிங்கப்பூர்-பதிவு பெற்ற கப்பல் ஒன்று தற்போது உக்ரேனிய துறைமுகத்தில் உள்ளது, மேலும் மற்றொரு சிங்கப்பூர் பதிவு செய்யப்பட்ட கப்பல் கருங்கடலில் உள்ள ரஷ்ய துறைமுகத்தில் இருப்பதாக MPA தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கப்பல் உரிமையாளர்கள் மற்றும் நிறுவனங்களுடன் MPA நெருங்கிய தொடர்பில் உள்ளது, கப்பல்களும் பணியாளர்களும் பாதுகாப்பாகவும் நலமாகவும் இருப்பதாக அது கூறியது.

மேலும் இந்த கப்பல்களில் சிங்கப்பூரர்கள் யாரும் இல்லை எனவும் MPA குறிப்பிட்டுள்ளது.

இரத்தம் தோய்ந்த துண்டான கால் வீடியோ இணையத்தில் பரவல்… கண்டெடுக்கப்பட்ட சடலம் – என்ன நடந்தது?