சிங்கப்பூரில் கிருமி தொற்றால் மேலும் 3 பேர் உயிரிழப்பு – MOH

Google Maps

சிங்கப்பூரில் நேற்று பிப்., 6 நிலவரப்படி, புதிதாக 7,752 பேருக்கு COVID-19 பாதிப்பு பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சகம் (MOH) கூறியுள்ளது.

இதில் 7,639 பேர் உள்ளூர் அளவிலும், மேலும் 113 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் என்றும் MOH கூறியுள்ளது.

விதிகளை மீறி ஒன்று கூடிய வெளிநாட்டவருக்கு S$3,000 அபராதம்..!

மேலும் 3 பேர் கிருமி தொற்றால் உயிரிழந்ததாக சுகாதார அமைச்சகத்தின் (MOH) இணையதள தொற்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. நாட்டில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 871ஆக உள்ளது.

MOH-ன் புதிய அணுகுமுறையின் கீழ், தினசரி தொற்று பாதிப்பு எண்ணிக்கையில் நடைமுறை 2ன் மொத்த எண்ணிக்கையும் இதில் அடங்கும்.

பிப்., 6 பதிவான சம்பவங்களில், நடைமுறை 2ல் 6,135 பேருக்கு நோய்த்தொற்றுகள் பதிவாகியுள்ளன.

இதில் 14 பேர் வெளிநாடுகளில் இருந்து சிங்கப்பூர் வந்தவர்கள் மற்றும் 6,121 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

PCR சோதனைகள் மூலம் மேலும் 1,617 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில் 99 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் 1,518 பேர் உள்ளூர் அளவில் பாதிக்கப்பட்டவர்கள்.

“இனிமே கட்டுப்பாடு கிடையாது… தாராளமா வரலாம்” – அறிவிப்பை வெளியிட்டு அசத்திய நாடு