சிங்கப்பூர் குடிமக்கள், நிரந்தரவாசிகளின் வேலைகள் குறைவு

ஊழியர்களின் சம்பளத்தை
MOM

சிங்கப்பூரில் வேலையில் இருந்த குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

2020ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டிலிருந்து முதல் முறையாக அந்த எண்ணிக்கை குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சகத்தின் (MOM) சமீபத்திய ஊழியர் சந்தை நிலவரங்கள் தெரிவிக்கின்றன.

சிங்கப்பூரில் உயரும் சம்பளம்.. பெரும்பாலான முதலாளிகள் முடிவு – 2024 முதல் பிளான்

சமுதாயம், சமூகம் மற்றும் தனிநபர் சேவைகள், நிதி மற்றும் காப்பீட்டு சேவைகள் போன்ற துறைகளில் சிறந்த அதிகரிப்பு இருந்தபோதிலும் 2023 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு எண்ணிக்கை 1,200 வரை குறைந்துள்ளது.

பருவகால காரணிகளால் சில்லறை வர்த்தகம் மற்றும் உணவு, பான சேவைகளில் பணிபுரிபவர்களின் எண்ணிக்கை குறைந்ததாக MOM தெரிவித்துள்ளது.

ஆண்டின் இரண்டாம் பாதி முதல் சீனப்புத்தாண்டு வரை தற்காலிக வேலைகளுக்காக பலர் வேலைக்கு எடுக்கப்படுகின்றன, ஆனால் ஒப்பந்தம் முடிந்ததும் அடுத்த ஆண்டின் முதல் பாதியில் அவர்கள் எண்ணிக்கையும் குறையும் என கூறப்பட்டுள்ளது.

வேலைக்கு எடுக்கப்படும் நபர்கள் மாணவர்கள் அல்லது பகுதி நேர ஊழியர்கள் என கூறப்பட்டுள்ளது.

வரும் மாதங்களில் குடியிருப்பாளர்களின் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் சொல்லப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட நிரம்பிய வெளிநாட்டு ஊழியர் விடுதிகள்.. வேலை அனுமதிக்கு நீண்ட காலம் எடுக்கலாம்