சிங்கப்பூரில் அதிகரிக்கும் “ரோபோகால்” அழைப்பு மோசடிகள்!

Singapore Robocalls scam
Robocalls on the rise with some targeting people working from home (Getty Image)

சிங்கப்பூரில் போலியான ரோபோ தொலைபேசி அழைப்புகள் அதிகரித்து வருகின்றன என்ற குற்றச்சாட்டு பதிவாகியுள்ளது.

இந்த கிருமித்தொற்று காலத்தில் வீட்டில் இருந்து வேலை செய்வோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது.

முகக்கவசம் அணியாமல் கடையில் இனவாத கருத்துக்களை கூறியவர்க்கு அபராதம்!

இந்த சூழலில், அவர்களை இலக்காக கொண்டு இந்த மோசடி கும்பல் தங்கள் வேலையை காட்ட தொடங்கியுள்ளன.

இது பற்றி திரு கோ என்பவர் கூறுகையில், வேலை மற்றும் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக அவரிடம் மூன்று தொலைபேசிகள் உள்ளதாம், அவற்றில் வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு மோசடி அழைப்புகளை சமீபத்தில் பெற்றதாகக் கூறினார்.

மோசடி செய்பவர்கள், உள்ளூர் ஏஜென்சிகள் அல்லது நிறுவனங்கள் போல பாதிக்கப்பட்டவர்களை கவர்ந்திழுக்க பாசாங்கு செய்வதாகவும் கூறப்படுகிறது.

இந்த அழைப்புகள் மிகவும் சிரமமாக உள்ளதாகவும், நேரத்தை வீணடித்து, வேலையை சீர்குலைக்கிறது என்றும் அவர் கூறினார்.

இதுபோன்ற ரோபோ அழைப்புகள் பலருக்கு தெரிந்திருக்கலாம், இதில் இணைய இணைப்பில் புதுப்பிப்பு அல்லது பழுது குறித்த போலி தகவல் மூலம் குரல் பதிவு அனுப்பப்படுகிறது அல்லது பார்சல் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படும்.

புகார்கள்

இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில், சீன அதிகாரிகள் போல ஆள்மாறாட்டம் செய்து மோசடி செய்ததாக 224 புகார்கள் வந்துள்ளதாக கூறப்படுகிறது.

2019ஆம் ஆண்டின் இதே காலகட்டத்தில் 121 வழக்குகள் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. ​​

சிங்கப்பூரில் டபுள் டெக்கர் SBS பேருந்து பெண் மீது மோதி விபத்து!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…