“சிங்கப்பூர் டாப்” – உலகின் “மிகவும் செலவுமிக்க” நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் 2வது இடம்!

Singapore second most expensive city

உலகில் வாழ்வதற்கு “மிகவும் செலவுமிக்க” நகரங்களின் பட்டியலில் சிங்கப்பூர் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

பொருளாதார புலனாய்வுப் பிரிவின் (EIU) உலகளாவிய வாழ்க்கைச் செலவு 2021 அறிக்கையின்படி, உலகில் வாழ்வதற்கு மிகவும் செலவுமிக்க நகரங்களின் இரண்டாவது இடத்தை சிங்கப்பூர் பிடித்துள்ளது.

DBS வங்கி சேவை தடங்கல்: “வங்கி மீண்டும் சிறப்பாகச் செயல்படும்” – CEO

கடந்த 2020ல் நான்காவது இடத்தில் இருந்த சிங்கப்பூர், தற்போது இந்த புதிய தரவரிசை பட்டியலில் இரண்டு இடங்கள் முன்னேறியுள்ளது.

பாரீஸ், சிங்கப்பூருடன் சேர்ந்து இரண்டாவது இடத்தைப் பகிர்ந்து கொண்டது.

இஸ்ரேலின் கடற்கரை நகரமான டெல் அவிவ், மற்ற அனைத்து நகரங்களையும் முந்திக்கொண்டு, இந்த ஆண்டின் உலகின் மிக செலவுமிக்க நகரமாக முதலிடம் பிடித்தது.

அந்த பட்டியலில் சூரிச், சுவிட்சர்லாந்து நான்காவது இடத்திலும், ஹாங்காங் ஐந்தாவது இடத்திலும் உள்ளன.

சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி வந்தவர்களுக்கு தொற்று உறுதி – தொற்று ஆபத்து நாடு என்பதால் தீவிர சோதனை

முதல் 10 நகரங்கள் இங்கே:

1. டெல் அவிவ்

2. சிங்கப்பூர்

2. பாரிஸ்

4. சூரிச்

5. ஹாங்காங்

6. நியூயார்க்

7. ஜெனீவா

8. கோபன்ஹேகன்

9. லாஸ் ஏஞ்சல்ஸ்

10. ஒசாகா