மியான்மர் நாட்டிற்கு ஆக்ஸிஜன் கலன்களை வழங்கிய சிங்கப்பூர்.!

Singapore send covidaid myanmar
Pic: Twitter/Vivian Balakrishnan

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் மியான்மர் நாட்டிற்கு உதவ, 300 ஆக்ஸிஜன் கலன்களை சிங்கப்பூர் அனுப்பியுள்ளது.

சிங்கப்பூர் அரசு 200 ஆக்ஸிஜன் கலன்களையும், Temasek நிறுவனம் 100
ஆக்ஸிஜன் கலன்களையும் வழங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

“எல்லா நாட்டிலும் பிரச்சனைகள் இருக்கின்றன”- அமைச்சர் கா.சண்முகம்!

மேலும், மியான்மர் நாட்டிற்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் (Red Cross) மூலமாக ஏனைய மருத்துவப் பொருட்களும் அனுப்பப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

COVID-19க்கு எதிரான போராட்டத்தில் மியான்மர் நாட்டிற்கு உதவ, சிங்கப்பூர் கடமை கொண்டுள்ளதாக அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

மியான்மர் நாட்டில் பாதிக்கப்பட்ட உள்ளூர் சமூகங்களுக்கு உகந்த நேரத்திலும், வெளிப்படையாகவும் மருத்துவப் பொருட்களை விநியோகிக்க இருநாட்டு செஞ்சிலுவைச் சங்கங்களும் இணைந்து பணியாற்றும் என அவர் குறிப்பிட்டார்.

சிங்கப்பூரில் பிறந்த முதல் பாண்டா குட்டியின் பாலினம் கண்டுபிடிப்பு – பொதுமக்கள் பெயரை பரிந்துரைக்கலாம்.!