தாய்லாந்துக்கு கொரோனா தடுப்பு மருந்தை அனுப்பியுள்ள சிங்கப்பூர்!

Photo: Embassy of the Republic of Singapore in Bangkok

சிங்கப்பூர் அரசு மற்றும் தன்னார்வ நிறுவனங்கள், அமைப்புகள் இணைந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள அண்டை நாடுகளுக்கு வெண்டிலேட்டர்கள், ஆக்சிஜன் சிலிண்டர்கள், ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர்கள், கொரோனா தடுப்பூசி மருந்துகள், மருத்துவ உபகரணங்கள், மருந்து, மாத்திரைகளை கப்பல் மூலமாகவும், விமானம் மூலமாகவும் அனுப்பி வருகின்றன.

‘அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை… சிக்கிய போதைப்பொருட்கள்’- நான்கு பேர் கைது!

அந்த வகையில் தாய்லாந்து நாட்டிற்கு மேலும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை சிங்கப்பூர் அரசு அனுப்பியுள்ளது. இது தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தாய்லாந்து நாட்டிற்கு 1,22,400 டோஸ் ‘AstraZeneca’ நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசி மருந்தை சிங்கப்பூர் அரசு அனுப்பியுள்ளது. அத்துடன் 2,00,000 மருத்துவ பரிசோதனைச் சாதனங்கள் (Diagnostic Tests), 5,00,000 Nasopharyngeal Swabs என்றழைக்கப்படும் மூக்கு வழியே நுழைக்கக்கூடிய குச்சிகள் ஆகியவையும் தாய்லந்துக்கு அனுப்பப்பட்டன.

சிங்கப்பூர் அனுப்பிய மருத்துவ பொருட்கள் தாய்லாந்து தலைநகர் பாங்காக்கிற்கு சென்றடைந்தது. அதையடுத்து, விமான நிலையத்தில் தாய்லாந்துக்கான சிங்கப்பூர் தூதர் கெவின் சியோக் (Kevin Cheok), தாய்லாந்து நாட்டின் துணைப் பிரதமரும், பொதுச் சுகாதார அமைச்சருமான அனுட்டின் சார்ன்விராக்குலிடம் (Anutin Charnvirakul) மருத்துவப் பொருட்களை ஒப்படைத்தார்.

மலேசியாவின் ‘DuitNow’ செயலியுடன் இணையவுள்ள சிங்கப்பூரின் ‘PayNow’ செயலி!

சிங்கப்பூரும், தாய்லாந்தும் நீண்டகால நெருங்கிய நட்புநாடுகள். கொரோனா நோய்த்தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் இரு நாடுகளின் இணைந்து பங்காற்ற வேண்டும் என்பதை சிங்கப்பூரின் பங்களிப்பு காட்டுகிறது.” இவ்வாறு வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, நேபாளம் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் மருத்துவ உபகரணங்கள், திரவ ஆக்சிஜன் நிரப்பிய டேங்கர்கள் உள்ளிட்டவையை சிங்கப்பூர் அரசு ஏற்கனவே அனுப்பி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.