வெள்ளம், நிலச்சரிவால் இந்தோனேசியா, திமோர்-லெஸ்டேவில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு – சிங்கப்பூர் ஆழ்ந்த அனுதாபம்

Singapore sends condolences to Indonesia and Timor-Leste
(Photo: AFP)

நிலச்சரிவுகள் மற்றும் வெள்ளம் ஆகிய இயற்கை சீற்றங்களால் பாதிக்கப்பட்ட இந்தோனேசியா மற்றும் திமோர்-லெஸ்டேவிற்கு சிங்கப்பூரின் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் தனது இரங்கலை தெரிவித்துள்ளார்.

செரோஜா என்னும் சூறாவளி கடந்த திங்களன்று இந்தோனேசியா மற்றும் திமோர்-லெஸ்டேவை கடுமையாக தாக்கியது.

“கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலைகள்” – போலி வேலை விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை

அதன் காரணமாக பெய்த மழையால் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதில் குறைந்தது 113 பேர் உயிரிழந்தனர் என்றும், மேலும் பலர் காணவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்றவற்றால் ஏற்பட்ட உயிரிழப்பு மற்றும் பேரழிவு பற்றி அறிந்து வருத்தம் அடைந்ததாக இந்தோனேசியாவின் வெளியுறவு அமைச்சர் ரெட்னோ மார்சுடிக்கு எழுதிய கடிதத்தில், டாக்டர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.

இந்த பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், வாழ்வாதாரங்கள் இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலைத் அவர் தெரிவித்துக்கொண்டார்.

அதே போல, திமோர்-லெஸ்டே வெளியுறவு அமைச்சர் அடல்ஜிஸா அல்பெர்டினாவிற்கு எழுதிய கடிதத்தில், துன்பம் நிறைந்த இந்த காலக்கட்டத்தில் அந்நாட்டு மக்கள் நமது நினைவில் இருப்பதாக டாக்டர் பாலகிருஷ்ணன் கூறினார்.

திமோர்-லெஸ்டேவின் நிவாரணம் மற்றும் மீட்பு முயற்சிகளுக்கு சிங்கப்பூர் செஞ்சிலுவைச் சங்கம் மூலம், சிங்கப்பூர் அரசு 50,000 அமெரிக்க டாலர்களை வழங்கும் என்றும் அவர் கூறினார்.

சிங்கப்பூரில் கட்டுமானத் துறைகளில் ஊழியர்கள் தட்டுப்பாடு – திட்டங்கள் பாதிப்பு..!