“கவர்ச்சிகரமான சம்பளத்துடன் வேலைகள்” – போலி வேலை விளம்பரங்கள் குறித்து எச்சரிக்கை

Singapore police warn scam advertising fake jobs
(PHOTO: SPF)

கவர்ச்சிகரமான சம்பளத்துடன் போலி வேலைகள் தொடர்பான விளம்பரங்கள் குறித்து சிங்கப்பூர் காவல் படை (SPF) பொதுமக்களை எச்சரித்துள்ளது.

இது தொடர்பான குறுஞ்செய்திகள் சம்பந்தப்பட்ட மோசடி குறித்து SPF எச்சரிக்கை விடுத்துள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமானத் துறைகளில் ஊழியர்கள் தட்டுப்பாடு – திட்டங்கள் பாதிப்பு..!

இதில் பொதுமக்கள் தாம் ஏமாற்றப்படுகிறோம் என்பதை அறியாமலேயே குற்றவியல் செயல்களின் மூலம் மோசடிக்காரர்கள் பெற்ற வருமானத்தை மாற்றக்கூடும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.

இதுபோன்ற குறுச்செய்திகளை பெறும்போது நான்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு பொதுமக்களுக்கு காவல்துறை அறிவுறுத்தினர்.

முன்னெச்சரிக்கை

உங்களுக்கு கிடைக்கும் சந்தேகத்திற்கிடமான URL இணைப்புகளை கிளிக் செய்யக்கூடாது.

முன்பின் தெரியாதோருக்கு வேலை தொடர்பாக பணப் பரிமாற்றங்களைச் செய்ய தனிப்பட்ட வங்கி கணக்குகளைப் பயன்படுத்த வேண்டாம்.

ஒருபோதும் அந்நியர்களுக்கோ அல்லது நேரில் சந்திக்காத நபர்களுக்கோ பணம் அனுப்ப வேண்டாம்.

வங்கி கணக்கு உள்நுழைவு தகவல்களை யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் தங்கள் தனிப்பட்ட கணக்கு மூலம் செய்யப்படும் அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் அவர்களே பொறுப்பு.

கள்ளப்பணத்தை நல்லப் பணமாக்க இதுபோன்று பயன்படுத்தப்படும் தனி நபர்களின் வங்கிக் கணக்குகள் உடனடியாக முடக்கப்படும் என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.

சிங்கப்பூரில் வேலையிடங்களுக்கு திரும்பும் ஊழியர்கள் – பெரும் மகிழ்ச்சி!