சென்னை to சிங்கப்பூர்.. இந்தியா, சிங்கப்பூரில் செயல்படும் போலி நிறுவனங்கள் – மோசடி கண்டுபிடிப்பு

Singapore Shell companies linked money laundering operation India

சிங்கப்பூரில் செயல்படும் போலியான நிறுவனங்கள் மென்பொருள் மற்றும் பிற சேவைகளை இந்தியாவில் உள்ள போலி நிறுவனங்களுக்கு வழங்கியதாக போலி ரசீதுகள் சம்பந்தப்பட்ட பணமோசடி நடவடிக்கை கண்டறியப்பட்டதாக இந்திய சட்ட அமலாக்கத்துறை கூறியது.

இந்தியாவின் நிதி அமைச்சகத்தின் கீழ் வரும் அமலாக்கத்துறை (ED) வெளியிட்ட அறிக்கையில் இதனை தெரிவித்தது.

சிங்கப்பூர் வேலை வேண்டாம் என வேதாரண்யத்தில் பர்னிச்சர் ஷோரூம் திறந்த ஊழியர் – கடையை காண தாமாகவே வந்த முதலாளி

சீன நிறுவனங்களை தளமாக கொண்டு கடன், சூதாட்டம் மற்றும் பந்தயம் போன்ற செயலிகளில் இருந்து பெறப்பட்ட பணத்தை, சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு இந்தியாவில் உள்ள போலி நிறுவனங்கள் அனுப்பியதாக அது கூறியது.

சென்னை, பெங்களூர், டெல்லி மற்றும் மும்பை போன்ற இந்திய நகரங்களில் செயல்படும் பல போலி நிறுவனங்கள் மூலம் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களுக்கு பணம் அனுப்பப்பட்டதாக அமலாக்கத்துறை குறிப்பிட்டுள்ளது.

கிட்டத்தட்ட S$19.9 மில்லியன் (1.23 பில்லியன் ரூபாய்) தொகை இந்தியாவில் உள்ள வங்கிக் கணக்குகளில் இருந்து சிங்கப்பூர் போலி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டதாக ED தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் பொது இடங்களில் தப்பி தவறிக்கூட இதை செய்துவிடாதீர்கள் – மீறினால் உங்க “போட்டோ” வெளியாகலாம்