டோக்கியோ பாராலிம்பிக்: இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை.!

Singapore swimmers final Paralympics
Pic: Sport Singapore

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டிகள் கடந்த சில வாரங்களுக்கு முன் நடைபெற்று முடிந்தது. இந்நிலையில், நேற்று (ஆகஸ்ட் 24) மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் தொடங்கியுள்ளது.

மாற்றுத் திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டிகளில் விளையாட சிங்கப்பூரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி விளையாட்டாளர்கள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவிற்கு சென்றனர்.

“சிங்கப்பூர் விளையாட்டு வீரர்கள் கடுமையாக உழைத்துள்ளனர்”- பிரதமர் லீ சியன் லூங்!

இந்நிலையில், சிங்கப்பூர் நீச்சல் வீராங்கனை யிப் பின் சியு பெண்களுக்கான 100 மீட்டர் backstroke S2 போட்டியில் (Yip Pin Xiu) இன்று (25-08-2021) இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சிங்கப்பூர் நேரப்படி இன்று மாலை 4.40 மணியளவில், நடைபெறும் இறுதிப் போட்டியில் யிப் பின் சியு பங்குபெறுகின்றார். அவர் கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டிகளில் தங்க பதக்கம் வென்றது குறிப்பிடத்தக்கது.

ரியோ டி ஜெனிரோவில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் இரண்டு தங்கப் பதக்கங்களையும், மேலும் 2008 ஆம் ஆண்டு பெய்ஜிங் பாராலிம்பிக்கில் ஒரு தங்கப் பதக்கத்தையும் யிப் பின் சியு வென்றுள்ளார்.

அடுத்த மூன்று ஆண்டுகளில் 150 புதிய பணியாளர்களைப் பணியில் அமர்த்த திட்டமிட்டுள்ள ‘PayPal’!