சிங்கப்பூரில் இருந்து மதுரை.. “23 வருட கனவு நினைவானது” – தாம் படித்த கிராமத்துக்கு அன்பு பரிசளித்த ஊழியர்

Singapore Tamil man dreams comes true
Source: Tamil Media

சிங்கப்பூரில் வசித்து பணியாற்றி வரும் தமிழர், தாம் படித்த தன்னுடைய பள்ளி மாணவர்கள் பயன்பெற வேண்டும் என சிறந்த பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

சிங்கப்பூரில் தமிழாசிரியராக இருக்கும் அன்பழகன், மதுரை மாவட்டத்தில் உள்ள வலச்சிக்குளத்தில் மாணவர்களுக்காக நூலகம் ஒன்றை திறந்து தன் கனவை நிறைவேற்றியுள்ளார்.

இந்திய விமான நிலையங்களில் மீண்டும் RT-PCR சோதனையா?

அந்த கிராம பகுதி மாணவர்கள் அனைத்து துறைகளிலும் சிறந்த வேலைவாய்ப்புகளை பெற வேண்டும் என்பதே அவரின் மிக முக்கிய இலக்கு.

மதுரை மாவட்டம் மருதூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன். அவர் அருகில் உள்ள வலச்சிக்குளத்தில் 5ஆம் வகுப்பு படித்துள்ளார்.

பின்னர் கல்லூரி படிப்புகளை முடித்த அவர், 2000 இல் சிங்கப்பூர் கிரீன் ரிச் உயர்நிலை பள்ளியில் வேலைக்கு சேர்ந்தார். அவரின் மனைவியும் அதே பள்ளியில் பணிபுரிகிறார்.

இந்நிலையில், தாம் படித்த வலச்சிக்குளத்தில் நூலகம் திறக்க வேண்டும் என்பது அவரின் கனவு, 23 ஆண்டுகளுக்கு பின்னர் அந்த கனவு நினைவாகியுள்ளது.

அண்மையில், தம் மனைவியுடன் வலச்சிக்குளம் வந்த அவர், நூலகத்தை திறந்து வைத்தார்.

கிராமப்புற மாணவர்கள் பல்வேறு துறைகளில் குறிப்பாக அரசு போட்டி தேர்வுகள் போன்றவற்றிலும் வெற்றி பெற வேண்டும் என சுமார் 600 க்கும் மேற்பட்ட புத்தகங்களை அங்கு வைத்துள்ளார்.

அதில் TNPSC வழிகாட்டி உட்பட பல்வேறு சிறப்பு நூல்களும் இடம்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

“இந்தியாவுக்கு திரும்பி போ” – 10 வருடங்களாக சிங்கப்பூரில் பணிபுரியும் ஊழியரை கொச்சைப்படுத்திய டாக்ஸி ஓட்டுநர்