“தனி ஆளாக சிங்கப்பூருக்கு வேலைக்கு செல்ல முடியாது, குரூப்பா தான் ஆள் வேணும்”… தந்திரமாக ஏமாற்றிய ஆடவர் – ஏமாந்துபோன அப்பாவி இளைஞர்கள்

வெளிநாட்டு ஊழியர்களுக்காக புதிய பொழுதுபோக்கு
Photo: Benar

புதுவை சாரதாம்பாள் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்ற ஆடவர் லாஸ்பேட்டை முக்கிய சாலையில் ஜெராக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

அவரிடம் வழக்கமாக ஜெராக்ஸ் எடுக்கும் வாடிக்கையாளரான 49 வயதான முல்லை நாதன், சிங்கப்பூரில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்துள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த விமானத்தில், கேட்பாரற்று கிடந்த 1.450 கிலோ தங்கம்!

சிங்கப்பூரில் தனக்கு தெரிந்த நண்பர் ஒருவர் என்ஜினீயராக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்பதாகவும், அவர் சென்னை வந்துள்ளார் என்றும் அவரின் மூலமாக வேலைவாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் நாதன் கூறியுள்ளார்.

இதனை அடுத்து, இதனை உண்மை என்று நம்பிய குணசேகரன், தனது கடைக்கு அருகில் கடை வைத்திருக்கும் சாதிக் என்பவரிடம் இதுபற்றி எடுத்து கூறி, அவரின் மகனுக்கு சிங்கப்பூரில் வேலைக்கு பெற்றுத்தர இரண்டரை லட்சம் பணம் வாங்கி நாதனிடம் கொடுத்துள்ளார்.

3 மாதங்களில் வேலைக்கு சென்றுவிட தயாராக இருக்கும்படி கூறிய நிலையில், 5 மாதங்கள் ஆகியும் ஒன்றும் நடக்கவில்லை. இது குறித்து நாதனிடம் கேட்டபோது தனி ஆளாக வேலைக்கு செல்ல முடியாது, குழுவாக தான் அனுப்ப முடியும் என கூறியுள்ளார்.

இதன் காரணமாக மேலும் 9 பேரிடம் இருந்து ரூ.14 லட்சம் பணத்தை பெற்று நாதனிடம் கொடுத்துள்ளார் குணசேகரன்.

பின்னரும், ஏதோ ஒரு சாக்குபோக்கு கூறி மழுப்பி வந்த நாதனை பற்றி விசாரித்தபோது, அவர் சொந்த ஊரான நாகை மாவட்டம் சீர்காழி, திருமுல்லை வாசலில் வசித்து வந்தது அவர்களுக்கு தெரியவந்தது.

பின்னர், குணசேகரன் நாதனிடம் நேரடியாக சென்றுகேட்க அவர் தருவதாக கூறியுள்ளார். வேலை வேண்டி பணம் கொடுத்தவர்கள் குணசேகரனை தொந்தரவு செய்ய ஆரம்பித்துள்ளனர், இதனால் அவர் வட்டிக்கு பணம் பெற்று அவர்களுக்கு கடனை அடைந்துள்ளார்.

பின்னர், நாதன் தம்மை ஏமாற்றுவதை உணர்ந்த குணசேகரன் புதுவை CBCID போலீசில் புகார் செய்தார். அவரை பிடிக்க போலீசார் வலைவீசி வருகின்றனர்.

உணவங்காடி நிலையத்தில் பிடிபட்ட 6 பேர் – அபராதம் விதிப்பு