சிங்கப்பூரில் உடற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபட புதிய கட்டுப்பாடு.!

Singapore tightens Covid19 rules
Pic: Raj Nadarajan/TODAY

சிங்கப்பூர் உட்புற பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் நடைபெறும் உடற்பயிற்சி நடவடிக்கைகளில், இனி குழுவாக இருவர் மட்டுமே கலந்துகொள்ள அனுமதி அளிக்கப்படும் என அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

நாளை மறுநாள் (ஜூலை 19) திங்கட்கிழமை முதல் ஆகஸ்ட் மாதம் 8ம் தேதி வரை இது நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் தற்போது வரை உட்புற இடங்களில், முகக்கவசமின்றி ஐந்து பேர் வரையிலான குழுக்கள் உடற்பயிற்சியில் ஈடுபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடு: உணவகங்களில் இனி 5 பேர் குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.!

முழுமையாக COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், கிருமித்தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவை வைத்திருப்பவர்கள், கிருமித்தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் ஆகியோர்கள் ஐந்து பேர் கொண்ட குழுவாக பயிற்சியில் கலந்துகொள்ளலாம்.

மேலும், உடற்பயிற்சி வகுப்புகளில், ஐந்து பேர் அடங்கிய குழுக்களில் பயிற்றுவிப்பாளர் உட்பட அதிகபட்சம் 30 பேர் உடற்பயிற்சியில் ஈடுபடமுடியும்.

வெளிப்புற உடற்பயிற்சி நடவடிக்கைகளில், ஐந்து பேர் அடங்கிய குழுக்களில், பயிற்றுவிப்பாளர் உட்பட 50 பேர் வரை கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

COVID-19 விதிமீறல்: மூன்று நைட் கிளப்களின் உரிமம் ரத்து..அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!