சிங்கப்பூரில் மீண்டும் கட்டுப்பாடு: உணவகங்களில் இனி 5 பேர் குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை.!

two person limit dining
Pic: Google Maps

சிங்கப்பூரில் உள்ள உணவகங்களில் இனி மீண்டும் இரண்டு பேர் வரை மட்டுமே குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும், வருகின்ற ஜூலை 19ம் தேதி முதல் அடுத்த மாதம் 8ம் தேதி வரை இது நடைமுறைக்கு வர உள்ளது.

உணவகங்களில் தற்போது வரை, 5 பேர் வரையிலான குழுக்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், சமூக அளவில் மேலும் கிருமித்தொற்று பரவலை தடுக்க கட்டுப்பாடுகள் மேலும் கடுமையாக்கப்படுவதாக அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு தெரிவித்துள்ளது.

COVID-19 விதிமீறல்: மூன்று நைட் கிளப்களின் உரிமம் ரத்து..அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை.!

முழுமையாக COVID-19 தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள், 12 வயதுக்கு உட்பட்டவர்கள் 5 பேர் வரை குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும். இருப்பினும், இது உணவங்காடி நிலையங்கள், காப்பி கடைகள் போன்ற இடங்களுக்கு பொருந்தாது.

முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டு இரண்டு வாரம் ஆனவர்கள், COVID-19-லிருந்து குணமடைந்தவர்கள் (270 நாட்களுக்குள்) கிருமித்தொற்று இல்லை என்ற பரிசோதனை முடிவை வைத்திருப்பவர்கள், 12 வயதுக்கு உட்பட்ட பிள்ளைகள் போன்றவர்களுக்கு
5 பேர் வரை குழுவாக அமர்ந்து சாப்பிட அனுமதி அளிக்கப்படும்.

இந்தியா, சிங்கப்பூர் இடையே விமான சேவை- ஆகஸ்ட் மாதத்திற்கான அட்டவணையை வெளியிட்டது ‘ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்’!