வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதில் விதிகளை கடுமையாக்கும் சிங்கப்பூர்..!

சிங்கப்பூரர்கள் ஒரே சரிமட்டமாக போட்டியிடுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக வெளிநாட்டு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதற்கான விதிகள் கடுமையாக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளன.

இந்த ஆண்டு மே மாதம் முதல், வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதிக்கு (EP) குறைந்தபட்ச சம்பளம் மாதத்திற்கு, $3,900 ஆக உயர்த்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அந்தத் தொகை $3,600ஆக உள்ளது.

இதையும் படிங்க : கொரோனா வைரஸ்; பயணக் கட்டுப்பாடுகளை விரிவுபடுத்தும் சிங்கப்பூர்..!

“இந்த உயர்வு உள்ளூர் தன்னாட்சி பல்கலைக்கழகங்களின் புதிய பட்டதாரிகளின் ஊதியத்தை மேம்படுத்துவதற்கு ஏற்ப உள்ளது” என்று மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ, தனது அமைச்சின் வரவு செலவுத் திட்ட விவாதத்தில் (மார்ச் 3) கூறினார்.

மேலும், பழைய மற்றும் அதிக அனுபவம் வாய்ந்த EP ஊழியர்களின் சம்பள அளவுகோல்களும் அதிகரிக்கப்படும். எடுத்துக்காட்டாக, 40 வயது நிரம்பிய EP விண்ணப்பதாரை வேலைக்கு எடுக்கும் பட்சத்தில் அவருக்கு புதிய குறைந்தபட்ச சம்பளமான $3,900ஐ போல கிட்டத்தட்ட இரு மடங்கு ஊதியம் வழங்க வேண்டும்.

புதிய சம்பளத் விதிமுறைகள், அடுத்த ஆண்டு 2021, மே 1 முதல் EP புதுப்பித்தலின்போது நடைமுறைக்கு வரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் பலி; மினிபஸ் ஓட்டுநர் கைது..!

கடைசியாக, குறைந்தபட்ச EP.-தகுதி சம்பளம் 2017ஆம் ஆண்டு, மாதத்திற்கு $3,300ல் இருந்து $3,600 வரை உயர்த்தப்பட்டது.

கூடுதலாக, S Pass என்னும் வேலை அனுமதி ஊழியர்களின் சம்பளம், $1,300-லிருந்து $1,400-க்கு உயர்த்தப்படும். இது ஜூலை மாதம் முதல் நடைமுறைக்கு வரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SingaporeLatestTamilnews #Tamilnews #சிங்கப்பூர்தமிழ்செய்திகள் #Singaporetamil