சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பறந்த ‘Project Arpana’ குழுவினர்….ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவி செய்து அசத்தல்!

சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு பறந்த 'Project Arpana' குழுவினர்....ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உதவி செய்து அசத்தல்!
Photo: Project Arpana

 

சிங்கப்பூரில் உள்ள நண்பர்கள் குழுவாகச் சேர்ந்து ‘Project Aparna’ என்ற குழுவை உருவாக்கியுள்ளனர். இந்த குழுவின் நோக்கம், ஏழை, எளிய மக்கள் மற்றும் ஆதரவற்றவர்களுக்கு உதவுவது ஆகும். அந்த வகையில், ஐந்து நாள் பயணமாக, ‘Project Aparna’ குழுவினர், சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னைக்கு வந்துள்ளனர்.

சிங்கப்பூரில் 60 ஆண்டுகளுக்கு மேலாக பழக்கடை நடத்தி வரும் “91 வயது இளைஞர்” – கடும் மழைக்கு மட்டுமே விடுமுறை

அதைத் தொடர்ந்து, மார்ச் 01- ஆம் தேதி சென்னை வேலப்பன்சாவடியில் உள்ள கருணை வில்லா அறக்கட்டளை மையத்திற்கு சென்ற ‘Project Aparna’ குழுவினர், ஆதரவற்ற சிறுவர், சிறுமிகளுடன் கலந்துரையாடியும், அவர்களுடன் நேரத்தை செலவிட்டும் மகிழ்ந்ததுடன், அவர்களுக்கு தேவையான வசதிகள் மற்றும் உதவிகளையும் வழங்கி அசத்தினர்.

அதன் தொடர்ச்சியாக, சென்னை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள ஆதரவற்றோர் மையங்களில் உள்ள குழந்தைகளை நேரில் சந்தித்து வரும் ‘Project Aparna’ குழுவினர், அவர்களுக்கு உதவிகளை வழங்கி வருகின்றனர்.

வரும் மார்ச் 04- ஆம் தேதி வரை ‘Project Aparna’ குழுவினர் தமிழ்நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொள்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒர்க் பெர்மிட் அனுமதி உடைய வெளிநாட்டு ஊழியர்களுக்கு PR மற்றும் குடியுரிமை கொடுக்கப்படுவதில்லை ஏன்?

விடுமுறை நாட்களில் நம்மில் பலரும் திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்ட பொழுதுப்போக்கு இடங்களுக்கு செல்லும் நிலையில், ‘Project Aparna’ குழுவினரின் செயல் மற்றவர்களை ஊக்கப்படுத்தியுள்ளது என்றால் மிகையாகாது.