இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!

India VTL Singapore: தடுப்பூசி போட்டுக்கொண்ட இந்திய விமானப் பயணிகள் தனிமைப்படுத்துதல் இல்லாமல் மார்ச் 16 முதல் சிங்கப்பூர் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள பல நகரங்களிலிருந்து வரும் பயணிகளுக்கு அது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது சென்னை, டெல்லி மற்றும் மும்பை மட்டுமல்லாமல் அனைத்து இந்திய நகரங்களையும் உள்ளடக்கியதாக VTL சேவை இருக்கும்.

S Pass, EP தகுதிச் சம்பள உயர்வு…. உள்ளூர் ஊழியர்களின் வேலை வாய்ப்பை அதிகரிக்குமா?

அதோடு சேர்த்து, மலேசியா, இந்தோனேசியா ஆகிய நாடுகளை சேர்ந்த விமானப் பயணிகளும் தனிமை நிறைவேற்றாமல் சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்.

இந்தியா, மலேசியா, இந்தோனேசியா ஆகிய முக்கிய இடங்களில் இருந்து VTL சேவையை விரிவுபடுத்துவதற்கான இந்த நடவடிக்கை பயணத்தை எளிதாக்கும் என்றும் CAAS கூறியுள்ளது.

மேலும் சிங்கப்பூர் இந்த முக்கிய சந்தைகளுடன் விமான மையத்தின் இணைப்பையும் மேம்படுத்தும் என்றும் அது கூறியது.

சிலர் நினைத்தவுடன் வெளிநாடுகளுக்கு பக்கத்து ஊருக்கு சென்று வருவது போல சென்று வருகிறார்களே, அது எப்படி..?