சிங்கப்பூர் வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2024இல் எகிறும் – விசா இல்லா பயணமும் காரணமாக இருக்கும்

Singapore tourist 2024 update
Kaung Myat Min/Unsplash

சிங்கப்பூர் வரும் சர்வதேச சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை இந்த ஆண்டில் மட்டும் 15 முதல் 16 மில்லியனை எட்டக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை வர்த்தகம் மற்றும் தொழில் அமைச்சர் ஆல்வின் டான் நேற்று (மார்ச் 1) தெரிவித்தார்.

இராமநாதபுரத்தில் ஊழியர் வீட்டு திருமணம்.. சிங்கப்பூர் முதலாளிகள் “மாஸ் என்ட்ரி” – பள்ளிக்கு நிதி வழங்கி கௌரவம்

அதே போல, இங்கு வரும் அந்த சுற்றுலாப் பயணிகள் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் காலகட்டத்தில் சுமார் S$26 பில்லியன் முதல் S$27.5 பில்லியன் வரை செலவிடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

2023 ஆம் ஆண்டில் எதிர்பார்க்கப்பட்ட சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை எதிர்பார்ப்பை விட விஞ்சியது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான 30 நாள் விசா இல்லாத பயண ஏற்பாடு இந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்க முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

சிங்கப்பூருக்கும் சீனாவுக்கும் இடையிலான 30 நாள் விசா இல்லாத பயண ஏற்பாடு கடந்த பிப்ரவரி 9, 2024 முதல் நடப்பில் உள்ளது.

வெளிநாட்டு ஊழியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம் – “சட்டம் தன் கடமையை செய்தது”