சிங்கப்பூரில் இன்று முதல் வந்துள்ள அதிரடி மாற்றங்கள்; அனைத்தும் ஒரே பதிவில் – வாங்க பார்ப்போம்!

Singapore dormitory rent
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் COVID-19 தொற்றுநோய் பரவல் கட்டுக்குள் வரும் பட்சத்தில், விதிக்கப்பட்ட பாதுகாப்பு நடைமுறைகளில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என சிங்கப்பூர் முன்னர் அறிவித்தது.

அதன் பேரில், இன்று முதல் (மார்ச் 15) நடைமுறைக்கு வரும் மாற்றங்கள் குறித்து இந்த பதிவில் நாம் காண்போம்.

ஊமைப் பெண்ணை ஏமாற்றிவிட்டு கல்யாணமான 15 நாளில் சிங்கப்பூர் எஸ்கேப்பான கணவன் – கதறும் தமிழ் பெண்!

குழு அளவு

ஒன்றுகூடலின் குழு அளவு எண்ணிக்கை தொடர்ந்து 5 ஆக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

வீடுகளில் ஒன்றுகூடல்

சிங்கப்பூர் வீடுகளில் 5 பேர் வரை ஒரே நேரத்தில் ஒன்றுகூடலாம். ஒரு நாளைக்கு 5 பேர் என்ற விதிமுறை இனி இருக்காது.

முகக் கவசம்/பாதுகாப்பு இடைவெளி

முகக்கவசம் அணிந்திருக்கும் இடங்களில் பாதுகாப்பு இடைவெளி தேவையில்லை. இருப்பினும், முகக் கவசம் அணியாத இடங்களில் மட்டும் அது கட்டாயம்.

குளியலறையில் ரகசிய கேமரா..மனைவியின் சகோதரிகள் குளிப்பதை வீடியோ எடுத்த ஆடவர் – குற்றச்சாட்டு!

நிகழ்ச்சிகள்

1000க்கும் குறைவான எண்ணிக்கையில் பெரிய நிகழ்வுகளில் பங்கேற்பவர்களின் திறன் வரம்பு 50% ஆகும், இதில் பாதுகாப்பு இடைவெளி பின்பற்ற வேண்டியதில்லை.

வேலையிடம்

அதே போல், ஊழியர்கள் 50 சதவீதம் பேர் வரை அவர்களின் வேலையிடத்துக்குச் செல்ல முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழு விளையாட்டு

முழுமையாக தடுப்பூசி செலுத்திகிக்கொண்ட சுமார் 30 பேர் வரை ஒன்றாக இனி குழு விளையாட்டுகளில் கலந்துகொள்ள முடியும்.

வேலைத் தேடுபவர்களுக்கு ஆறுதலை அளித்துள்ள மனிதவள அமைச்சகத்தின் அறிவிப்பு!

வெளிநாட்டு ஊழியர்கள்

சிங்கப்பூரில் தங்கும் விடுதியில் உள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு வரவுள்ள மாற்றங்கள் – முழு விவரம்!

வெளிநாட்டு பயணிகள்

சிங்கப்பூர் வரும் “வெளிநாட்டு பயணிகள்” கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை – இன்று முதல் நடைமுறை!