சிங்கப்பூர் to திருச்சி வந்த 140 பேர்: “வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது” – கண்காணிக்கும் அதிகாரிகள்

trichy airport

சிங்கப்பூரில் இருந்து திருச்சி விமான நிலையத்துக்கு வந்த 140 பேர் அடுத்த ஒரு வாரத்திற்கு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

கடந்த டிசம்பர் 2ஆம் தேதி இரவு 10.30 மணிக்கு சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு தனியார் விமானம் மூலம் 141 பயணிகள் வந்தனர், அவர்கள் முதலில் விமான நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.

சிங்கப்பூரில் இருந்து மதுரை, திருச்சி வந்தவர்களுக்கு தொற்று உறுதி – தொற்று ஆபத்து நாடு என்பதால் தீவிர சோதனை

இந்த ஒமைக்ரான் வைரஸ் காரணமாக 12 நாடுகளுக்கு கடுமையான சோதனை நடைமுறையை இந்தியா அறிவித்துள்ளது, அதில் சிங்கப்பூரும் அடங்கும்.

அதன் வழிகாட்டுதலின்படி, அந்த பயணிகள் அனைவருக்கும் PCR பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 55 வயதான ஆடவர் ஒருவருக்கு மட்டும் தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து, அவர் திருச்சி புத்தூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார். இவரின் ரத்த மாதிரிகள் ஒமைக்ரான் சோதனைக்காக பெங்களூருவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அந்த ஆடவர் மற்ற பயணிகளுடன் ஒன்றாக பழகியதாக கூறப்படுகிறது, எனவே அவர்கள் அனைவரின் முகவரியை பெற்று கொண்ட அதிகாரிகள் அவர்களை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிட்டுள்ளனர்.

அந்தந்த பகுதிகளில் கண்காணிக்க சுகாதாரப் பணியாளர்களை பணியில் ஈடுபடவும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், அந்த 140 பேரும் வீட்டை விட்டு வெளியே செல்ல கூடாது என்றும், உடல்நிலையை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

DBS வங்கி சேவை தடங்கல்: “வங்கி மீண்டும் சிறப்பாகச் செயல்படும்” – CEO