சிங்கப்பூருக்கு மலிவுக் கட்டணத்தில் சுற்றுலா…பயணிகளிடம் ரூபாய் 20 லட்சம் மோசடி!

 

குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் (Rajkot) உள்ள கோடெச்சா சௌக் (Kotecha Chowk) என்னும் பகுதியில் அமைந்துள்ள இரண்டு சுற்றுலா நிறுவனங்கள், மலிவுக் கட்டணத்தில் சிங்கப்பூர் மற்றும் மலேசியா ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்துச் செல்வதாக விளம்பரம் செய்துள்ளது. குறிப்பாக, விமானக் கட்டணம், ஹோட்டலில் தங்குவதற்கு, டேக்சி மற்றும் அங்கு சுற்றிப் பார்ப்பதற்கு என ஒரு குடும்பத்திற்கு 5.48 லட்சம் என்று தெரிவித்துள்ளனர்.

ஷார்ஜாவில் இருந்து கோவைக்கு கடத்தி வரப்பட்ட மூன்று கிலோ தங்கம் பறிமுதல்!

இதனை நம்பிய கிரிட் மோலியா தனது குடும்பம் உள்பட நான்கு குடும்பங்களுக்கு சேர்த்து ரூபாய் 20.40 லட்சம் செலுத்தியுள்ளார். பணம் செலுத்திய மறுநாள் அலுவலகத்திற்கு சென்ற அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அலுவலங்கள் பூட்டப்பட்டிருந்தது. மேலும், அவர்களின் தொலைபேசி எண் தொடர்புக் கொண்ட போது, அவை அணைக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு சென்று புகார் அளித்துள்ளனர். அதில், 20.40 லட்சம் ரூபாய் ரொக்கம், பாஸ்போர்டுகள், முக்கிய ஆவணங்கள் உள்ளிட்டவைகளை அந்த மோசடி நபர்களிடம் கொடுத்துள்ளோம். எனவே, அனைத்தையும் அவர்களிடம் இருந்து மீட்டு தரும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

சிங்கப்பூரில் பிறந்து, இங்கேயே வளர்ந்த வெளிநாட்டு பெண் – இன்னமும் PR என்ற தகுதியை பெற முடியவில்லை

மோசடியில் ஈடுபட்ட தீப் தன்னா (Deep Tanna) மற்றும் ரித்தி தன்னா (Ridhi Tanna) ஆகிய இரண்டு நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவுகள் 420 மற்றும் 120 (பி) கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், குற்றவாளிகளை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.