சிங்கப்பூரில் வேலையிழந்தவர்களுக்கு தலா S$500 உதவி..!

Singapore unemployed helping
(Photo: MOM/FB Page)

கொரோனா தொற்றுநோய்க்கு மத்தியில், வேலையில்லாமல் இருக்கும் குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட சிங்கப்பூர் குடும்பங்களுக்கு உதவ S$4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன் படி, தகுதிவாய்ந்த ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு முறை தற்காலிக உதவியாக S$500 செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கனமழை காரணமாக திடீர் வெள்ளம், மரம் முறிந்து விழுந்தது.

Ngee Ann Kongsi, சமூக மேம்பாட்டு கவுன்சில் (CDC) ஆகியவை இணைந்து கோவிட் -19 நிவாரண நிதி திட்டத்தை தொடங்கினர்.

வயது வரம்பு

இந்த திட்டம், 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட சிங்கப்பூரர்களை இலக்காகக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யார் பெறலாம்?

அதாவது, அவர்கள் தற்போது வேலையில்லாமல் இருக்க வேண்டும். ஊதிய விடுப்பு, பணிநீக்கம் தானாக பெற்றவராக இருக்க கூடாது.

மேலும், இந்த திட்டத்திற்கான விண்ணப்பத்தின் போது குறைந்தது மூன்று மாதங்களுக்கு வேலை இழப்பு காரணமாக வருமான இழப்பை சந்தித்தவராக இருக்க வேண்டும்.

எப்போது திட்டம் தொடங்கும்?

இந்த நவம்பர் 15 முதல் தகுதியான சிங்கப்பூரர்களை அடையாளம் காண CDCகள் சமூக பங்காளிகளுடன் இணைந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் புதிதாக ஒரே ஒருவருக்கு கிருமித்தொற்று பாதிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…