சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழகத்தைப் பார்வையிட்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

சிங்கப்பூர் தொழில்நுட்பம், வடிவமைப்புப் பல்கலைக்கழக்த்தைப் பார்வையிட்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான்!
Photo: Minister Dharmendra Pradhan

 

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக சிங்கப்பூர் வந்துள்ள இந்திய கல்வி மற்றும் திறன் மேம்பாடு, முனைவோர்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், சிங்கப்பூர் நிதித்துறை அமைச்சரும், துணைப் பிரதமருமான லாரன்ஸ் வோங், சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், சிங்கப்பூர் கல்வி அமைச்சர் சான் சுன் சிங், சிங்கப்பூர் வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் கான் கிம் யோங் ஆகியோரைத் தனித்தனியே நேரில் சந்தித்துப் பேசினார்.

ஸ்ரீ தெண்டாயுதபாணி திருக்கோயிலில் நாளை மஹா கும்பாபிஷேகம்….. பக்தர்களுக்கு அழைப்பு விடுத்தது இந்து அறக்கட்டளை வாரியம்!

அத்துடன், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்திற்கு சென்ற அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு பயிலும் இந்திய மாணவர்களுடனும், பேராசிரியர்களுடனும் கலந்துரையாடினார். அதேபோல், சிங்கப்பூரில் உள்ள பள்ளிகளுக்கு சென்ற அமைச்சர் தர்மேந்திர பிரதான், மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை குறித்து கேட்டறிந்தார்.

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர் தொழில்நுட்பம் மற்றும் வடிவமைப்புப் பல்கலைக்கழத்திற்கு (Singapore University of Technology & Design) சென்று பார்வையிட்ட அமைச்சர் தர்மேந்திர பிரதான், அங்கு பயிலும் மாணவர்கள் கண்டுபிடித்த புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் ரோபோக்களின் செயல்பாடுகளை நேரில் பார்வையிட்டார்.

சிங்கப்பூர் கல்வி அமைச்சரைச் சந்தித்த இந்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான்!

பாடத்திட்ட வடிவமைப்பு, ஆராய்ச்சி மற்றும் புதிய தொழில்நுட்பம் உள்ளிட்டவைக் குறித்து பேராசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுடன் ஆலோசனை நடத்தினார்.