தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கட்டுமான ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள்.!

Singapore Unvaccinated foreign workers
Pic: AFP

சிங்கப்பூரில் இன்று (16-08-2021) முதல் COVID-19 தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கட்டுமானத் துறை ஊழியர்களுக்கு புதிய விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன.

தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கட்டுமான ஊழியர்கள் கட்டுமான தளங்களில் பணிபுரியும் போது, தனித்துவமான அடையாளங்கள் அணிந்திருப்பது கட்டாயம் என கூறப்பட்டுள்ளது. அவற்றில், வண்ணமிக்க மேலாடைகள், கைப்பட்டைகள், தலைக்கவசத்தில் ஒட்டுவில்லைகள் போன்றவை அடங்கும்.

குற்றங்களை தடுக்க உதவிய 3 தனிநபர், 5 அமைப்புகளுக்கு காவல்துறை விருதுகள்

கட்டுமான ஊழியர்கள் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார்களா என்பதை அதிகாரிகள் சோதனை செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத கட்டுமான ஊழியர்களை அணுக்கமாகக் கண்காணித்து, பாதுகாப்பு நிர்வாக நடவடிக்கைகளை அவர்கள் பின்பற்றுவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமானம் மற்றும் கப்பல் பட்டறை போன்ற துறைகளில் பணிபுரியும்
வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி இந்த ஆண்டுடன், காலாவதியாகி புதுப்பிப்புக்கான தகுதிகளைப் பூர்த்திசெய்ய தவறினாலும் அவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை வேலை அனுமதி நீட்டிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் வேலை அனுமதி நீட்டிப்பு – நிறுவனங்கள் வரவேற்பு