தேசிய தினத்தன்று பிறந்த முதல் குழந்தைகளை வரவேற்ற சிங்கப்பூர்..!

Singapore welcome National Day Babies
Singapore welcome National Day Babies (PHOTO: KK Women's and Children's Hospital/FB)

சிங்கப்பூரில் நேற்று தேசிய தினத்தன்று, இரண்டு குடும்பங்கள் தங்களுடைய குழந்தைகளை வரவேற்றுள்ளனர்.

முதல் குழந்தையை KK மகளிர், குழந்தைகள் மருத்துவமனை வரவேற்றதாக மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : ஆள்குறைப்பு நடவடிக்கையின்போது நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம்..!

இதில் ஒரு தம்பதிக்கு, சரியாக நள்ளிரவு 12 மணிக்கு மட்டில்டா (Matilda) என்னும் பெயர்சூட்டப்பட்ட பெண் குழந்தை பிறந்தது.

அந்த பெண் குழந்தை மட்டில்டா பிறந்ததற்கு எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று மருத்துவமனை நிர்வாகம் முகநூலில் தெரிவித்துள்ளது.

We are privileged to welcome Singapore's first National Day Baby right here at KKH! Our heartiest congratulations to Mr…

Posted by KK Women's and Children's Hospital on Sunday, August 9, 2020

அதன் பிறகு, சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் மற்றொரு தம்பதி அழகான ஆண் குழந்தையை அன்று அதிகாலை 12.44 மணிக்கு பெற்றெடுத்துள்ளனர்.

அந்த குழந்தைக்கு கோலின் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

தேசிய தினத்தன்று பிறந்ததற்கு தங்களுடைய மனமார்ந்த வாழ்த்துக்களை மருத்துவமனை நிர்வாகம் முகநூலில் தெரிவித்துள்ளது.

Our heartiest congratulations to Mr and Mrs Tay on the birth of their beautiful baby boy, Colin. SGH's first National…

Posted by Singapore General Hospital on Saturday, August 8, 2020

தேசிய தின விடுமுறையில் குழந்தையின் பிறந்தநாள் வரும் என்பதால், பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக கூடுதல் விடுப்பு எடுக்கத் தேவை ஏற்படாது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் மிகப்பெரிய நோய்பரவல் இடமான வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிப்பு..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg