சிங்கப்பூரின் மிகப்பெரிய நோய்பரவல் இடமான வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிப்பு..!

Singapore’s biggest COVID-19 cluster at S11 dormitory closes
(Photo: Reuters / Edgar Su)

சிங்கப்பூரின் மிகப்பெரிய நோய்பரவல் இடமான, புங்க்கோலில் உள்ள S11 தங்கும் விடுதி COVID-19 அபாயம் இல்லாத இடமாக, அதாவது கிருமித்தொற்றிலிருந்து விடுபட்டு விட்டதாக சுகாதார அமைச்சகம் (MOH) சனிக்கிழமை (ஆகஸ்ட் 8) அறிவித்துள்ளது.

இந்த S11 தங்கும் விடுதியில் முதல் COVID-19 பாதிப்பு நான்கு மாதங்களுக்கு முன்னர் பதிவு செய்யப்பட்டது. அங்கு மொத்தம் பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 2,846ஆக பதிவாகியுள்ளது. இது சிங்கப்பூரில் மிகப்பெரிய COVID-19 நோய்ப்பரவல் குழுமம் ஆகும்.

இதையும் படிங்க : “சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருந்து, துணிவுடன் மீண்டும் வெற்றி காண்பார்கள்” – பிரதமர் லீ..!

அதே போல நேற்றைய நிலவரப்படி, சிங்கப்பூரில் மேலும் 11 தங்கும் விடுதிகள் நோய்ப்பரவல் குழுமங்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டன.

(Image: Ministry of Health)

பட்டியலில் இடம்பெற்றுள்ள தங்கும் விடுதிகளில் கிருமித்தொற்றுகள் முற்றிலும் இல்லை, தற்போது குணமடைந்தவர்களும் மற்றும் சமீபத்தில் COVID-19 தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டவர்களும் மட்டுமே உள்ளனர்.

சிங்கப்பூரில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிகமானோர் தங்கும் விடுதிகளில் வசிக்கும் ஊழியர்கள் ஆவார்கள். நேற்று சனிக்கிழமை நண்பகல் வரை தங்கும் விடுதிகளில் 51,993 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

முன்னதாக, பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இந்த மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்ப முடியும் என்று நோய்த்தொற்றுக்கான அமைச்சகங்களின் பணிக்குழு இணைத் தலைவர் திரு லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

மேலும், இதில் கட்டுமான பணிகள் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்க முடியும் என்றும், தேவையான பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg