சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை..!

(Photo: India in Singapore/Twitter)

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பல்வேறு நாடுகளில் சிக்கிய, இந்திய குடிமக்களை மீட்க “வந்தே பாரத் மிஷன்” சிறப்பு திட்டம் செயல்பட்டு வருகிறது.

இந்த வந்தே பாரத் திட்டத்தின் கீழ், தமிழகத்திற்கு மட்டும் பல ஆயிரக்கணக்கானோர் வெளிநாடுகளில் இருந்து சொந்த பகுதிகளுக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் வேலைக்கு அமர்த்துவதில் நியாயமற்ற செயல்முறை; சந்தேகிக்கப்படும் நிறுவனங்களின் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்..!

வந்தே பாரத் மிஷன் திட்டத்தில் 5ஆம் கட்டமாக சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் அட்டவணையை சிங்கப்பூருக்கான இந்திய தூதரகம் வெளியிட்டது. தற்போது புதுப்பிப்பு பட்டியலை அது வெளியிட்டுள்ளது.

பயணிகள் அனைவருக்கும் தமிழகம் சென்றதும் விமான நிலையத்திலேயே மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதனை தொடர்ந்து 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களால் கட்டணம் செலுத்தி ஓட்டல்களில் தங்க முடியாதவர்களுக்காக, தமிழக அரசு இலவச தங்குமிடங்கள் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Photo: HCI Singapore

இதையும் படிங்க : சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் COVID-19 பரிசோதனை முடிந்தது: MOH

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg