சிங்கப்பூரில் தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் COVID-19 பரிசோதனை முடிந்தது: MOH

(Photo: Suhaimi Abdullah/Getty Images)

தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளாக செயல்படும், தங்கும் விடுதிகளில் ஒரு சில தனித்தனி பிளாக்குகளை தவிர, தங்கும் விடுதிகளில் வசிக்கும் அனைத்து வெளிநாட்டு ஊழியர்களுக்கும் COVID-19 தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த தனிமைப்படுத்தப்பட்ட வசதிகளில் உள்ள ஊழியர்களின் தனிமைப்படுத்தப்பட்ட காலம் முடிவடையும் போது பரிசோதிக்கப்பட இருப்பதால், மேலும் வரவிருக்கும் நாட்களில் கிருமித்தொற்று எண்ணிக்கைகள் அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : சிங்கப்பூர் தேசிய தினம்: தீவு முழுவதும் பொது எச்சரிக்கை ஒலி..!

நேற்று வெள்ளிக்கிழமை நண்பகல் வரை, தங்கும் விடுதிகளில் 51,868 நோய்த்தொற்று சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதில் 51,862 பேர் நீண்ட கால அனுமதி வைத்திருப்பவர்கள் மற்றும் வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள், மேலும் ஐந்து சிங்கப்பூரர்கள் அல்லது நிரந்தர வாசிகள் மற்றும் ஒரு பார்வையாளர் அடங்குவர்.

முன்னதாக, பெரும்பாலான வெளிநாட்டு ஊழியர்கள் இந்த மாத இறுதிக்குள் வேலைக்குத் திரும்ப முடியும் என்று நோய்த்தொற்றுக்கான அமைச்சகங்களின் பணிக்குழு இணைத் தலைவர் திரு லாரன்ஸ் வோங் தெரிவித்தார்.

மேலும், இதில் கட்டுமான பணிகள் இந்த மாத இறுதிக்குள் மீண்டும் தொடங்க முடியும் என்றும், தேவையான பாதுகாப்பு மேலாண்மை நடவடிக்கைகளை தொடர்ந்து பின்பற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் உதவி தேவைப்படும் வெளிநாட்டு ஊழியருக்கான சில உதவி எண்கள்

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg