ஆள்குறைப்பு நடவடிக்கையின்போது நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் – சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம்..!

Singapore's top business chamber has urged employers to retrench workers only as a last resort
(PHOTO: Reuters)

சிங்கப்பூரில் COVID-19 கிருமித்தொற்று காரணமாக பல்வேறு வர்த்தகங்கள் பாதிக்கப்பட்டு மீண்டும் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன

ஆள்குறைப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் சூழல் ஏற்பட்டால், நிறுவனங்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரின் மிகப்பெரிய நோய்பரவல் இடமான வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிப்பு..!

சிங்கப்பூர் வர்த்தகச் சம்மேளனத்தில் உறுப்பியம் பெற்றுள்ள சுமார் 27,000க்கும் அதிகமான நிறுவனங்களிடம் சம்மேளனம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, மனிதவள அமைச்சகம் (MOM) வெளியிட்ட முதற்கட்ட தகவல்களின்படி, வெளிநாட்டு இல்லப் பணிப்பெண்களைத் தவிர, இங்குள்ள ஊழியர்களின் எண்ணிக்கை இரண்டாவது காலாண்டில் 121,800ஆக குறைந்துள்ளதாக தெரிவித்தது.

சிங்கப்பூரின் வேலையின்மை விகிதம் இந்த இரண்டாவது காலாண்டில், கடந்த பத்தாண்டு காணாத அளவு உயர்ந்துள்ளது. அதாவது இந்த விகிதம் முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில் 2.9% உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : “சிங்கப்பூரர்கள் ஒற்றுமையாக இருந்து, துணிவுடன் மீண்டும் வெற்றி காண்பார்கள்” – பிரதமர் லீ..!

மேலும் அதிகமானோர் வரும் மாதங்களில் ஆள்குறைப்பு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடலாம் என்று சம்மேளனம் கவலை தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இறுதிக்கட்ட நடவடிக்கையாக இந்த ஆள்குறைப்பு நடவடிக்கை இருக்கவேண்டும் என்பது உள்ளிட்ட நெருக்கடிகால பரிந்துரைகளை சம்மேளனம் முன்வைத்துள்ளது.

முடிந்தவரையில், பெரும்பாலான வேலைகளைப் பாதுகாப்பதற்கு, அரசாங்க அமைப்புகள் மற்றும் தேசியத் தொழிற்சங்க காங்கிரஸ் ஆகியவற்றுடன் இணைந்து நிறுவனங்கள் செய்லபட வேண்டும் என்றும் சம்மேளனம் வலியுறுத்தியுள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரிலிருந்து தமிழகம் செல்லும் விமானங்களின் புதிய அட்டவணை..!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…
?? Facebook  https://www.facebook.com/tamilmicsetsg/
?? Twitter      – https://twitter.com/tamilmicsetsg
??Telegram  – https://t.me/tamilmicsetsg