தேசிய தினத்தில் பிறந்த குழந்தைகள்- குடும்பங்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!

PHOTO: THOMSON MEDICAL

சிங்கப்பூரின் 56- வது தேசிய தினத்தை பொதுமக்கள் மிகுந்த உற்சாகத்துடன், அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தங்கள் வீட்டில் இருந்தவாறு குடும்பத்துடன் கொண்டாடினர். இந்த நிலையில், சில குடும்பங்களுக்கு, குறிப்பாக தம்பதிகளுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி நாளாகவும், வாழ்வில் மறக்க முடியாத நாளாகவும் அமைந்துள்ளது தேசிய தினம். இதற்கு என்ன காரணம் என்று கேட்கிறீர்களா? ஆம், சில தம்பதிகளுக்கு ஆகஸ்ட் 9- ஆம் தேதி நள்ளிரவில் குழந்தை பிறந்துள்ளது. தேசிய தினத்தன்று குழந்தை பிறந்துள்ளதால் அவர்கள் மட்டற்ற மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்று நள்ளிரவு 12.00 AM மணிக்கு தாம்சன் மருத்துவமனையில் (Thomson Medical Centre) டியோ ஹுய் ஸியான் (Teo Hui Xian) (வயது 38), டெரெக் லியு (Derek Liu) (வயது 35) தம்பதிக்கு அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்த குழந்தையின் எடை 2.53 கிலோ ஆகும். தொழிலாளர் இயக்கமான என்டியுசியில் (NTUC) பணிபுரியும் இந்த தம்பதிக்கு பிறந்த முதல் குழந்தை இதுவாகும். தேசிய தினத்தன்று குழந்தைப் பிறந்ததால் அந்த தம்பதி இரட்டிப்பு மகிழ்ச்சி அடைந்தது. அத்துடன் அவர்களின் குடும்பத்தினரும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்.

தேசிய தினத்தன்று புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சிவப்பு ஆப்பிள்களை வழங்கிய தன்னார்வலர்கள்!

இது குறித்து அந்த தம்பதி கூறுகையில், “தங்களுக்கு ஒரு தேசிய தின குழந்தையை எதிர்பார்த்தோம். அதைப்போலவே குழந்தை பிறந்துள்ளது. ஆனால் இது இன்னும் ஆச்சர்யமாக இருக்கிறது” என்றார்.

இந்த தம்பதி ஒவ்வொரு ஆண்டும் தேசிய தின அணி வகுப்பை நேரில் பார்க்க டிக்கெட் பெற முயற்சித்தது. அவர்கள் இதுவரை இரண்டு முறை நிகழ்ச்சிக்கான டிக்கெட்டுகளை வென்றுள்ளனர்.

அதைத் தொடர்ந்து, ஆகஸ்ட் 9- ஆம் தேதி அன்று மவுண்ட் எலிசபெத் நோவேனா மருத்துவமனையில் (Mount Elizabeth Novena Hospital) ஒரு பெண் குழந்தையும், கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் (KK Women’s and Children’s Hospital- ‘KKH’) அதிகாலை 12.02 AM மணிக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.

சிங்கப்பூர் தேசிய தினம்- இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் வாழ்த்து!

கே.கே மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் (KK Women’s and Children’s Hospital- ‘KKH’) பிறந்த ஒரு ஆண் குழந்தையின் பெற்றோர் நூர் ஃபாரா ஹில்மியா அப்துல் ரஹீம் (Nur Farah Hilmiyyah Abdul Rahim) (வயது 29)- முஹம்மது அஸ்ரீ அஸ்ஸெமன் (Muhammad Azree Aszeman) (வயது 29) கூறுகையில், “எங்களது ஆண் குழந்தையின் எடை 4.1 கிலோ ஆகும். தேசிய தினத்தை கொண்டாடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிக்க தங்கள் குடும்பம் ஒரு புள்ளியாக இருக்கும். இப்போது, ​​எங்கள் மகன் கைசர் உவைஸ் (Qaizer Uwais) தனது பிறந்த நாளுக்காக ஒவ்வொரு ஆண்டும் பட்டாசு வெடிப்பார்” எனத் தெரிவித்தனர். இந்த தம்பதிக்கு இந்த குழந்தை இரண்டாவது குழந்தையாகும்.