ஜோகூர் நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறங்கிய விமானம்!

Singaporean pilots make emergency landing
Singaporean pilots make emergency landing (Photo: Kulai Police)

இரண்டு சிங்கப்பூர் விமானிகள், தங்களின் இலகுரக விமானத்தை இன்று (நவ. 22) காலை ஜோகூரில் உள்ள நெடுஞ்சாலையில் அவசர அவசரமாக தரையிறக்கினர்.

சிங்கப்பூரின் சிலேத்தர் (Seletar) விமான நிலையத்திலிருந்து மலாக்காவுக்குச் சென்று கொண்டிருந்த விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஏற்பட்டதால் அது அவசரமாக தரையிறக்கப்பட்டது.

சிங்கப்பூரிலிருந்து சென்னை, கோவை, திருச்சி செல்லும் விமானங்கள்!

இதனை மலேசியா விமான போக்குவரத்து ஆணையத்தின் (CAAM) தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் செஸ்டர் வூ (Chester Voo) செய்திக்குறிப்பில் தெரிவித்தார்.

விமானிகள் உடல்நிலை சீராக இருப்பதாகவும், நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு விளைவிக்காத வகையில் விமானம் அப்புறப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிக்கு அனுப்பப்பட்ட மீட்புக் குழு, தேவையான அனைத்து பணிகளையும் முடித்துவிட்டதாகவும் திரு வூ கூறியுள்ளார்.

மேலும், இந்த சம்பவத்தில் எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படவில்லை என்றும் ஜொகூர் காவல்துறை தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நாட்டுக்கு விமான சேவை ஒத்திவைப்பு- கட்டணத்தை முழுமையாக பெற்றுக்கொள்ளலாம்: SIA

இந்த இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடு

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…