இந்த இரு நாடுகளிலிருந்து சிங்கப்பூர் நுழையும் அனைத்து பயணிகளுக்கும் புதிய கட்டுப்பாடு!

மலேசியா அல்லது ஜப்பானில் இருந்து சிங்கப்பூருக்குள் நுழையும் அனைத்து பயணிகளும், அரசாங்கம் அமைத்துள்ள வசதிகளில் 14 நாள் வீட்டில் தங்கும் கட்டாய உத்தரவை (Stay-home notice) நிறைவேற்ற வேண்டும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) தெரிவித்துள்ளது.

இந்த புதிய அறிவிப்பு இன்று ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 22) இரவு 11.59 மணி முதல் பொருத்தும் என்றும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

சிங்கப்பூரில் கட்டுமான ஊழியரின் மனிதநேய செயல்; குவியும் பாராட்டு.!

Community Sponsored: 

ஹியட் ஹோங் சமூக மன்ற இந்திய நற்பணி செயற்குழு ஆதரவில் பிரம்மாண்டமான தீபாவளி நிகழ்ச்சி:

எதனால் கட்டுப்பாடு?

சிங்கப்பூரில் அமைச்சகங்களுக்கு இடையிலான பணிக்குழு, உலகளாவிய COVID-19 சூழ்நிலையை உன்னிப்பாக கண்காணித்து வருகிறது.

மேலும், மலேசியா மற்றும் ஜப்பானில் தொற்று பாதிப்புகள் மீண்டும் அதிகரித்து இருப்பதால் எல்லை நடவடிக்கைகள் கடுமையாக்கப்படும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

யாருக்கு பொருத்தும்?

அந்த இரு நாடுகளுக்கும் கடந்த 14 நாட்களில் பயணம் கொண்ட அனைத்து பயணிகளுக்கும் இந்த புதிய நடைமுறை பொருந்தும்.

கூடுதலாக, சிங்கப்பூர் குடிமக்கள் மற்றும் நிரந்தரவாசிகள் தவிர அனைத்து பயணிகளும் இது பொருந்தும்.

Reciprocal Green Lane, Periodic Commuting Arrangement ஆகிய பயணமுறையின்கீழ் சிங்கப்பூர் நுழையும் பயணிகளுக்கும் இந்த புதிய கட்டுப்பாடு பொருந்தும்.

சிங்கப்பூரில் உள்ள இந்த தங்கும் விடுதி தொற்று அபாயம் இல்லாத இடமாக அறிவிப்பு.!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…