தமிழ் உள்ளிட்ட 11 மொழிகள் பேசும் 23 வயதான சிங்கப்பூரரர்… கொரோனா காலத்தில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு உதவிய நல்லுள்ளம்

Singaporean speaks 11 languages Tamil
Tan and oliversoxford / TikTok

சிங்கப்பூரில் வழக்கத்தில் உள்ள அதிகபட்சமாக இரண்டு மொழிகளை பேசுவது என்பது பெரும்பாலான சிங்கப்பூரர்களின் வழக்கமாகும்.

ஆனால், ஜோனாஸ் ஃபைன் டான் என்ற 23 வயதுமிக்க இளைஞர் அந்த பட்டியலில் வர மாட்டார். ஏனெனில் அவரால் 11 மொழிகள் சரளமாக பேச முடியும் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

டாக்ஸியில் இசைத்த பாடல்.. பிடித்து போய் $100 டிப்ஸ் வழங்கிய வெளிநாட்டு பயணி – அப்டி என்ன பாடல்?

அவர் உளவியல், தத்துவம் மற்றும் மொழியியல் மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக்ஸ்போர்டு மாணவர்களின் வாழ்க்கை மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் டிக்டாக் வீடியோ ஒன்றில் அவரின் திறமை வெளிச்சத்துக்கு வந்தது.

சிங்கப்பூரரான அவருக்கு தமிழ் உட்பட 11 மொழிகள் தெரியும் என்பதை நிரூபித்து காட்டி அசத்தினார்.

அவர் தமிழ், ஆங்கிலம், மாண்டரின், மலாய், ஹொக்கியன், தாகலாக், தாய், ஸ்பானிஷ், போர்த்துகீசியம், இத்தாலியன் மற்றும் வியட்நாமிய மொழிகளில் பேசிக்காட்டினார்.

இந்த வீடியோ சுமார் 2.8 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

அதோடு முடித்து விடாமல், அரபு, குர்திஷ், ஹிந்தி, பெங்காலி, கொரியன், ஜப்பானியம், ரஷ்யன் மற்றும் மங்கோலியன் ஆகிய மொழிகளை அவரால் படிக்கவும் முடியும்.

அவரது தந்தை கட்டுமானத் தொழிலில் பணிபுரிவதால், பல வெளிநாட்டு ஊழியர்களுக்கு மொழிபெயர்ப்பு உதவிகளையும் அவர் வழங்கியுள்ளார்.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பாதிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் பலருக்கு அவர் பேருதவி செய்துள்ளார்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் மேலும் ஒரு இந்திய ஊழியர் மரணம் – சாங்கி ஈஸ்ட் கட்டுமான தளத்தில் விபத்து