“இங்கு பயணம் செய்ய வேண்டாம்”… எச்சரிக்கை செய்யும் சிங்கப்பூர்!

(Photo: Roslan Rahman / AFP/Getty Images)

பயணம் தொடர்பாக சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் (MFA) முக்கியமான தகவலை வெளியிட்டுள்ளது.

இலங்கைக்க்கு அத்தியாவசியமற்ற அனைத்து பயணங்களையும் ஒத்திவைக்குமாறு சிங்கப்பூரர்களுக்கு MFA அறிவுறுத்தியுள்ளது.

கார் முன்னே விசித்திரமாக நடந்துகொண்ட பெண்… நம்பர் பிளேட்டை உடைத்து எறிந்து அட்டகாசம்; வீடியோ வைரல்

போராட்டக்காரர்கள், அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின் மாளிகையை முற்றுகையிட்டு அவரை ராஜினாமா செய்யுமாறு கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில்,”இலங்கையில் இருக்கும் சிங்கப்பூரர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்” என்ற அறிவுரையை MFA வழங்கியுள்ளது.

தனிப்பட்ட பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் MFA கடுமையாக அறிவுறுத்தியுள்ளது.

போராட்டங்கள் நடக்கும் இடம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பொது இடங்களைத் தவிர்க்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அங்கு நடக்கும் செய்திகளை உன்னிப்பாகக் கண்காணித்து உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கனிவுடன் கவனிக்க வேண்டும் எனவும் சிங்கப்பூரர்களுக்கு MFA அறிவுறுத்தியுள்ளது.

சிங்கப்பூரில் கடந்த மாதம் உயிரிழந்த தமிழர்… சடலத்தை பெற்றுக்கொள்ள முன்வருமாறு போலீஸ் வேண்டுகோள்