சிங்கப்பூரில் பாதிப்பேர், எதிர்பாராமல் ஏற்படும் நிதி இழப்பீட்டை சமாளிக்க தடுமாறுவர்கள் என ஆய்வு வெளியீடு!

Photo: Families for Life

சிங்கப்பூரில் உள்ள 54% மக்கள் எதிர்பாராமல் ஏற்படும் வேலையிழப்பு மற்றும் உடல் இயலாமையால் தங்களது நிதித் தேவைகளை சமாளிக்க முடியாமல் தடுமாறுவார்கள்.

இவ்வாறு புருடென்ஷியல் நிறுவனத்தின் ஆணைபெற்று வெளிவந்த கருத்தாய்வு ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொரோனா சுய பரிசோதனைக் கருவிகளைப் பெறாதவர்கள் என்ன செய்ய வேண்டும்?- ‘SingPost’- ன் விளக்கம்!

2021ம் ஆண்டு மே மற்றும் ஜுன் மாதங்களில் சுமார் 1,218 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில், சிங்கப்பூரர்கள் நீண்ட காலம் வாழும் சூழலில், ஓய்வுக் காலத்திற்காக சேமித்து வைக்கும் தங்களின் ஆற்றல், உடல்நலம், நல்வாழ்வு ஆகியவற்றை கோவிட்-19 தொற்றுப் பரவல் பாதித்துள்ளதா என ஆராயப்பட்டது.

முக்கியமாக 35 முதல் 54 வரை உள்ள வயதினர்கள், மற்ற வயதினர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வறிக்கை தெரிவத்தது.

வாடகை & உணவு ஆகியவற்றின் விலையேற்றம், குறைந்த வட்டி விகிதம், பணவீக்கம் பற்றிய கவலைகள் மக்கள் மனதில் நிறைந்துள்ளது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் பல மக்கள் தங்களுக்கு தேவையான சேமிப்பை சேமிக்க முடியாமல் போகலாம் என சிங்கப்பூர் முதலீட்டு நிர்வாகச் சங்கத்தின் தலைவர் திருவாட்டி சூசுன் சோ கூறினார்.

35 முதல் 54 வயதினரில் 45 விழுக்காட்டினர் மன அழுத்தம் அதிகமாகிவிட்டதாகவும், உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆய்வில் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த ஆய்வில், பலர் வீட்டிலிருந்தே வேலை பார்ப்பதாகவும், அதில் சிலருக்குதான் இப்படி வேலை பார்ப்பது பிடித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆய்வு எடுக்கப்பட்ட ஒட்டுமொத்த பேரில் 47 விழுக்காட்டினர், கடந்த ஓராண்டில் கூடுதல் வேலையினால், அதிக மன அழுத்தத்தை தந்துள்ளதாகவும், தங்களது மனநலம் மோசமடைந்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதில் 25 விழுக்காட்டினர் உடல்நலம் மிகுந்த பாதிப்பிற்குள்ளானதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசியாவிற்கு ‘AstraZeneca’ கொரோனா தடுப்பூசி மருந்தை அனுப்பிய சிங்கப்பூர்!