சாங்கி விமான நிலைய முனையம் நான்கின் சேவை தற்காலிகமாக நிறுத்தம்..!

(Shutterstock/Nawadoln)

சிங்கப்பூரில் சாங்கி விமான நிலையத்தின் முனையம் 2-ன் சேவைகள் கடந்த மே 1 முதல் 18 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டது.

அதை தொடர்ந்து நேற்று சனிக்கிழமை முனையம் 4இன் சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியுள்ளதாக சாங்கி விமான நிலையக் குழுமம் (CAG) தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : சிங்கப்பூரில் புதிதாக 682 பேருக்கு COVID-19 கிருமித்தொற்று உறுதி..!

பயன்பாடுகள் மற்றும் துப்புரவு போன்ற செலவுகளை மிச்சப்படுத்தும் நோக்கில் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக CAG கூறியுள்ளது.

அதாவது நான்காவது முனையத்தில் வர்த்தகம் மிகவும் குறைந்ததாக கடைக்காரர்கள் குறிப்பிட்டுள்ளனர். இதன் காரணமாக ஊழியர்கள் வேறு பணிகளுக்கு திருப்பிவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

மீண்டும் 4வது முனையம் திறக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையும் படிங்க : தங்கும் விடுதிகளில் வசிக்காத கட்டுமான ஊழியர்களுக்கான வீட்டில் தங்கும் உத்தரவு நாளை முடிவு..!