சிங்கப்பூரில் மிக நீளமான பாலம்.. 682 மீட்டர் நீளம் – 2027ல் கட்டி முடிக்கப்படும்

சிங்கப்பூரில் மிக நீளமான பாலம்.. 682 மீட்டர் நீளம் - 2027ல் கட்டி முடிக்கப்படும்
Photo: URA

பான் தீவு விரைவுச்சாலையில் (PIE) 14 தடங்களை கொண்ட சுமார் 682 மீ நீளமுள்ள சைக்கிள் பாலம் கட்டப்படவுள்ளது.

செயின்ட் ஆண்ட்ரூஸ் ஜூனியர் பள்ளிக்கு அருகில் வரும் 2027 ஆம் ஆண்டில் அந்த பாலம் கட்டி முடிக்கப்படும்.

கண்டெடுக்கப்பட்ட பணப்பையை உரியவரிடம் ஒப்படைக்க வழிவகை செய்த வெளிநாட்டு ஓட்டுநர் சுரேஷ் – குவியும் பாராட்டு

இந்நிலையில், நகர மறுசீரமைப்பு ஆணையம் (URA) பாலம் கட்டுவதற்கான டெண்டர் கோர அழைப்பு விடுத்துள்ளது.

இந்த வகை பாலங்களில் இது தான் சிங்கப்பூரிலேயே மிக நீளமானதாக இருக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இதனால் செயின்ட் ஆண்ட்ரூஸ் ஜூனியர் கல்லூரிக்கு அடுத்துள்ள பூங்கா இணைப்பு வழிக்கும் ஜாலான் தாமானில் உள்ள அக்கம்பக்க பூங்காவிற்கும் இடையே பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டிகள் தடையின்றி பயணிக்க முடியும்.

இந்த பாலம், புதிய 1.2 கிமீ இணைப்பு வழியின் ஒரு பகுதியாக அமையும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இரண்டு பெண்களை தேடிவரும் போலீசார்