பிரபல பாடகி பவதாரிணி காலமானார்!

பிரபல பாடகி பவதாரிணி காலமானார்!
File Photo

 

இசையமைப்பாளர் இளையராஜாவின் மகளும், பிரபல பாடகியுமான பவதாரிணி காலமானார். அவருக்கு வயது 47.

30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு

புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த பாடகி பவதாரிணி, இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று (ஜன.25) மாலை 05.30 மணியளவில் உயிரிழந்தார்.

பிரபல பாடகி பவதாரிணி குறித்து விரிவாகப் பார்ப்போம்!

‘ராசய்யா’ திரைப்படத்தில் வரும் மஸ்தானா, மஸ்தானா பாடல் மூலம் பின்னணி பாடகியாக அறிமுகமானார். ‘பாரதி’ படத்தில் இடம் பெற்றுள்ள ‘மயில் போல பொண்ணு ஒன்னு’ என்ற பாடலுக்காக தேசிய விருதைப் பெற்றுள்ளார். திரைப்பட இசையமைப்பாளராகவும் பணியாற்றியுள்ளார் பவதாரிணி. இலக்கணம், அமிர்தம் உள்ளிட்டப் படங்களுக்கு பவதாரிணி இசையமைத்துள்ளார். நடிகை ரேவதி இயக்கிய இந்திப் படமான பிர் மிலேங்கே திரைப்படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

இளையராஜா மட்டுமின்றி கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா இசையிலும் பல பாடல்களைப் பாடியுள்ளார். தேவா, சிற்பி இசையிலும் பவதாரிணி பாடியுள்ளார்.