ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!

ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!
Photo: Sri Siva-Krishna Temple Facebook Page

 

தைப்பூசத் திருவிழா, சிங்கப்பூரில் உள்ள பிரசித்திப் பெற்ற கோயில்களில் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. பால்குடங்கள், காவடிகளை ஏந்தி வந்து பக்தர்கள் தங்களது நேர்த்திக் கடனை செலுத்தி, முருகனை வழிபட்டு வருகின்றனர். குறிப்பாக, சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் மட்டுமின்றி, சிங்கப்பூரர்களும், வெளிநாட்டினரும் பால்குடங்களை கோயிலுக்கு எடுத்து வந்து வழிபட்டு செல்கின்றனர்.

30 நாள் விசா இல்லாமல் பயணிகள் நுழையலாம்.. சிங்கப்பூர் உடன்பாடு – பிப்.09 முதல் நடப்பு

தைப்பூசத் திருவிழாவையொட்டி, சிங்கப்பூர் முழுவதும் விழாக்கோலம் பூண்டுள்ளது. அந்த வகையில், சிங்கப்பூரின் மார்சிலிங் ரிஷ் (Marsiling Rise) சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயம் (Sri Siva Krishna Temple). இந்த ஆலயத்தில் தைப்பூசத்தையொட்டி, முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஸ்ரீ சிவ கிருஷ்ண ஆலயத்தில் தைப்பூசத் திருவிழா கோலாகலம்!
Photo: Sri Siva-Krishna Temple Official Facebook Page

பணத்துக்காக வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்து கொண்டவருக்கு சிறை

அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. இதனிடையே, பால் குடங்களுடன் நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள், முருகன் சுவாமிக்கு எதிரில் உள்ள வேலுக்கு பால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.