“இந்த வேலையை செய்யுங்க உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்” – ஏமாந்துபோன பல ஆயிரம் பேர்

job scam in singapore

“இந்த வேலையை செய்யுங்க உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்” என்ற ஆசை வார்த்தைக்கு சுமார் 6,600 பேர் பலிகடாகியுள்ளனர்.

இந்த ஆன்லைன் வேலை தொடர்பான மோசடியில் இந்த ஆண்டு ஜனவரியில் இருந்து குறைந்தது 6,600 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கோவை, திருச்சியில் சிங்கப்பூருக்கு அதிரடி சலுகை.. கட்டணம் ரூ. 6,500 மட்டுமே – பல்வேறு சிறப்புகளை வழங்கும் Scoot

இதனால் குறைந்தது $96.8 மில்லியன் தொகை இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எப்படி ஏமாற்றுகிறார்கள்?

“இந்த எளிய ஆய்வுகளை முடித்து கொடுங்கள், உங்களுக்கு கமிஷன் கிடைக்கும்” என மோசடி கும்பல் வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் வழி செய்தி அனுப்புவார்கள்.

அதனை முடித்து கொடுக்கும் நபர்களுக்கு சிறிய தொகை கமிஷனாக கொடுக்கப்படும்.

“ஆஹா.. பணம் கிடைக்கிறது” என்று பேராசை கொள்ளும் நபர்கள் தான் அவர்களின் டார்கெட்.

மேலும் அதிகமாக நீங்கள் சம்பாதிக்கலாம் என கூறி உங்களை வாட்ஸ்அப் அல்லது டெலிகிராம் குழுவில் இணைத்து விடுவார்கள்.

பின்னர், ஒரு தொகையை வங்கி கணக்குக்கு அனுப்புங்க நிறைய கமிஷன் கிடைக்கும் என அவர்கள் ஆசை வார்த்தை கூறியவுடன், இவர்களும் பணத்தை போட்டு விடுவர்.

பின்னர் என்ன நடக்கும் என்று உங்களுக்கே தெரியும், போட்ட பணம் அனைத்தும் அவர்களுக்கே.

ஆகவே, “இணையம் வழி வேலை.. கமிஷன் தர்றோம்” இந்த ஆசை வார்த்தைகளுக்கு ஏமாந்துவிட வேண்டாம் என போலீசார் எச்சரிக்கை செய்துள்ளனர்.

லைஃப்ஸ்டைல்​, டிராவல் பொருட்களுக்கு 90% வரை அதிரடி தள்ளுபடி – இப்போதே முந்துங்கள்