சிங்கப்பூர் சிங்டெல் நிறுவனம், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் பங்கு கொள்முதல்

Photo: Hardware Zone

2021ம் ஆண்டு அக்டோபர் 5ம் தேதி முதல் அக்டோபர் 21ம் தேதிக்குள், பார்தி ஏர்டெல் நிறுவனம் இந்தியாவில் உரிமைப் பங்குகளை வெளியிடுகிறது.

ஏர்டெல் நிர்வாக சபை, நிதி திரட்டும் வேண்டும் என்பதற்காக இந்த பங்குகளை வெளியிடுவதற்கு ஆகஸ்ட் 29ம் தேதி அனுமதி வழங்கியது.

செப்.27 முதல் அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள் என்னென்ன?

அனுமதி வழங்கியிருந்தாலும் இந்த பங்கு வெளியீடுக்கு ஒழுங்குமுறை அமைப்பின் அங்கீகாரம் அவசியமானது.

சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனம், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் சுமார் 14% பங்கைக் கொண்டுள்ளது. இதன் அடிப்படையில் சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனத்திற்குப் பல உரிமைகள் இருக்கின்றன.

அந்த உரிமைகளை பயன்படுத்தி சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனம், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் உரிமைப் பங்குகளை வாங்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவில் பார்தி ஏர்டெல் நிறுவனம் வெளியிடப் போகும் உரிமைப் பங்குகளின் மதிப்பு 21,000 கோடியாக இருக்கும். அதில் 1 பங்கின் மதிப்பு 535 ரூபாய்.

ஒட்டுமொத்தமாக 29.4 பில்லியன் ரூபாய் அல்லது US$ 405 மில்லியன் கொடுத்து, சிங்டெல் 3 ஆண்டுகளில் பங்குகளை வாங்க திட்டமிடுகிறது.

சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனம் இந்த விவரங்களை, ஒழுங்குமுறை அமைப்பிடம் தாக்கல் செய்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

இந்தியாவின் மீதும், ஏர்டெல் நிறுவனத்தின் வளர்ச்சிகளின் மீதும், தான் கொண்டுள்ள நம்பிக்கையை இந்த முதலீடு வெளிப்படுத்துவதாக சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

உரிமைப் பங்குகளை வெளியிடுவதன் மூலம் ஏர்டெல் நிறுவனம் அமைக்கும் 5ஜி நெட்வொர்க் அமைப்பில் முதலீடு செய்ய ஏர்டெல் நிறுவனம் தங்களுக்கு வாய்ப்பை ஏற்படுத்தி தரும்.

இவ்வாறு இந்தியாவில் மின்னிலக்க முயற்சிகளுக்கு நல்ல முன்னேற்றம் கிடைக்கும் என்றும் நம்பிக்கைக் கொள்வதாக சிங்கப்பூரின் சிங்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மீது நம்பிக்கை வைத்த Panasonic நிறுவனத்திற்கு நன்றி; பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு NTUC, அமைப்புகள் உதவும் – பிரதமர் திரு. லீ!