Singtel, StarHub சந்தாதாரர்களின் தகவல்களை பயன்படுத்தி ஊழல் – 3 பேர் மீது குற்றச்சாட்டு!

Singtel StarHub information misuse
Singtel StarHub information misuse (Photo: AFP)

சிங்டெல் (Singtel) மற்றும் ஸ்டார்ஹப் (StarHub) ஆகியவற்றின் சந்தாதாரர்களின் தகவல்களை பயன்படுத்தி ஊழலில் ஈடுபட்டதாக 3 சிங்கப்பூர் ஆடவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக லஞ்ச, ஊழல் புலனாய்வுப் பிரிவு (CPIB) இன்று புதன்கிழமை (டிசம்பர் 16) தெரிவித்துள்ளது.

மேலும் அந்த குற்றத்தில் கணினியை முறைகேடாக பயன்படுத்தியதாகவும் 3 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

வேலை அனுமதி, S Pass விண்ணப்பங்களுக்கான கட்டுப்பாடுகளை தளர்த்தும் சிங்கப்பூர்!

அவர்களில் இருவர் ஃபூ சீக் ஆன் கெல்வின் (Foo Cheek Ann Kelvin), ஜாங் ஜியாஜெங் (Zhang Jiazheng) ஆகியோர், 37 வயதான லீ செங் யான் (Lee Cheng Yan) என்ற ஆடவருக்கு வாடிக்கையாளர்களின் ரகசிய விவரங்களை மீட்டெடுக்க உதவியதாகக் கூறப்படுகிறது.

மூன்றாவது குற்றவாளி, லிம் சோங் சியான் பில்பர்ட் (Lim Zong Xian Philbert), இவர் சில ரகசிய விவரங்களை பெற லீக்கு S$1,000 கொடுத்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்டார்ஹப், தரவு பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட தகவல்களை மிக தீவிரமாக பாதுகாப்பதாக தெரிவித்துள்ளது.

ஊழல் குற்றத்தில் தண்டனையாக, S$100,000 வரை அபராதம் விதிக்கப்படலாம் அல்லது 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரில் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்ட பெண் மனநலச் சட்டத்தின் கீழ் கைது!

சிங்கப்பூர் செய்திகளை உடனுக்குடன் எங்களுடன் தெரிந்துகொள்ள இணைந்திருங்கள்…