ஜெருசலேத்தில் நடந்த தாக்குதலுக்கு கடும் கண்டணத்தைப் பதிவு செய்த சிங்கப்பூர்!

Video Crop Image

ஜெருசலேத்தில் மத வழிபாட்டுத் தலத்துக்கு வெளியே மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 7 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் கண்டனத்தைப் பதிவுச் செய்து வருகின்றனர். அந்த வகையில், சிங்கப்பூர் அரசு தனது கடுமையான கண்டணத்தைப் பதிவு செய்துள்ளது.

BTO வீடுகளின் கட்டுமானப் பணிகள் நிறைவு! – கட்டுமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய கழகம்..

இது தொடர்பாக, சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் (Ministry Of Foreign Affairs, Singapore) செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ஜனவரி 27- ஆம் தேதி அன்று ஜெருசலேமில் உள்ள ஜெப ஆலயத்திற்கு வெளியே நடந்த வெறுக்கத்தக்க தாக்குதலை சிங்கப்பூர் வன்மையாகக் கண்டிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறோம்.

ஜெருசலேம் மற்றும் மேற்குப் பகுதியில் அதிகரித்து வரும் வன்முறைகள் குறித்து சிங்கப்பூர் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளது. மேலும், பொதுமக்களின் உயிர் இழப்பதைத் தடுக்க அனைத்து தரப்பினரும், அதிகபட்ச கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்கவும், பதட்டங்களைத் தணிக்கவும் கேட்டுக்கொள்கிறோம். இஸ்ரேலியர்கள் மற்றும் பாலஸ்தீனியர்கள் இருவரும் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் வாழ வேண்டும்.

ஜெருசலேம் தாக்குதலால் சிங்கப்பூரர்கள் யாரும் பாதிக்கப்பட்டதாக இதுவரை எந்தத் தகவலும் இல்லை. இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் கவனமுடன் செயல்படவும், உள்ளூர் செய்திகளைக் கண்காணிக்கவும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுறுத்தல்களைக் கவனிக்கவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். இஸ்ரேலுக்குப் பயணிக்கும் சிங்கப்பூரர்கள் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தில் பதிவுச் செய்யாதவர்கள், உடனடியாக https://eregister.mfa.gov.sg என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று பதிவுச் செய்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்… பக்தர்களுக்கு அழைப்பு!

தூதரக உதவி தேவைப்படும் இஸ்ரேலில் உள்ள சிங்கப்பூரர்கள் டெல் அவிவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம் அல்லது 24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகத்தைத் தொடர்புக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

டெல் அவிவில் உள்ள சிங்கப்பூர் தூதரகம்:

28 ஹாஹர்பா தெரு (HaArba’a Street),
தெற்கு டவர், 19வது தளம்,
டெல் அவிவ்- 6473926,
இஸ்ரேல்,
தொலைபேசி: +972 3 7289334,
ஃபேக்ஸ்: +972 3 7289340,
மின்னஞ்சல் முகவரி: singemb_tlv@mfa.sg.

24 மணி நேரமும் செயல்படும் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் அலுவலகம்:

தொலைபேசி எண்: +65 6379 8800 / 8855,
மின்னஞ்சல் முகவரி: mfa_duty_officer@mfa.gov.sg.