திண்டுக்கல்லில் இருந்து சிங்கப்பூருக்கு செல்லும் சின்ன வெங்காயம்!

Photo: Indiamart

திண்டுக்கல் மாவட்டத்தின் மேற்கு மீனாட்சிநாயக்கன்பட்டி அருகே வாரத்தில் திங்கள்கிழமை, புதன்கிழமை, வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று நாட்கள் மட்டும் வெங்காயத்திற்கு சென்று தனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்கெட்டிற்கு, திருச்சி, மதுரை, நாமக்கல், கரூர், பெரம்பலூர், அரியலூர், திருச்சி, திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் விவசாயிகள் சாம்பாருக்கு பயன்படுத்தக்கூடிய சின்ன வெங்காயம் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

கட்டுமான மேலாளர் இறுதிச்சடங்கில் குவிந்த ஊழியர்கள் – கண்ணீர் மல்க பிரியாவிடை

இந்த மார்கெட்டிற்கு விற்பனைக்கு வரக்கூடிய வெங்காயங்களை ஏல முறையில், வியாபாரிகள் பெற்று கோவை, சென்னை, சேலம், தஞ்சாவூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா உள்ளிட்ட அண்டை மாநிலங்களுக்கும் மட்டுமின்றி, சிங்கப்பூர் மற்றும் மலேசியா போன்ற வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கின்றனர்.

கடந்த மார்ச் 1- ஆம் தேதி வரை ஒரு கிலோ சின்ன வெங்கயம 30 ரூபாய் முதல் 35 ரூபாய் வரை விற்பனையாகி வந்தது. கடந்த மூன்று மாத காலத்தில் சென்ற வாரம் வரை சின்ன வெங்காயத்தின் விற்பனை விலை சமநிலையில் இருந்து வந்தது.

இந்த நிலையில், மலேசியா, சிங்கப்பூர் போன்ற வெளிநாடுகளில் இருந்து வியாபாரிகள் வெங்காயம் கொள்முதல் செய்ய திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு வருகை தந்துள்ளனர். அத்துடன், தினசரி வெங்காயத்தின் வரத்து 200 டன் என்பதில் இருந்து 300 டன் வரை அதிகரித்துள்ளது.

3 மாணவிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஆடவருக்கு சிறை

சிங்கப்பூருக்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதியாவதால், விவசாயிகளும், வியாபாரிகளும் கணிசமான அளவு வருவாய் கிடைப்பதாகவும், நல்ல விலைக்கு வெங்காயம் விற்பனையாவதாகவும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.