பாதசாரிக்கு வழிகொடுக்காமல் மோதுவது போன்று சென்ற பேருந்து – ஓட்டுநர் இடைநீக்கம்

SMRT bus driver suspended after near miss with pedestrian
(Images: Screengrab from Facebook video/SG Road Vigilante - SGRV)

சோவா சூ காங்கில் உள்ள சந்திப்பில் சாலையைக் கடக்கும் பாதசாரிக்கு வழிகொடுக்க தவறிய காரணத்தால் SMRT பேருந்து ஓட்டுநர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தின் காணொளி, SG Road Vigilante என்ற பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டது. அதில் போக்குவரத்து விளக்கு சாலையை கடக்க அனுமதி வழங்கிய பின்னர், பெண் ஒருவர் சாலையைக் கடப்பதைக் காட்டுகிறது.

இந்தியாவிற்கு 4 ஆக்ஸிஜன் கலன்களை அனுப்பிய சிங்கப்பூர்!

ஆனால், அந்த பேருந்து கிராசிங்கில் நிறுத்தாமல் செல்வதை காணலாம், உடனே அந்த பெண் வாகனம் மோதுவதை தவிர்க்க குதித்து செல்வதையும் காணமுடிகிறது.

சி.என்.ஏவின் கேள்விகளுக்கு பதிலளித்த SMRT இந்த சம்பவம் குறித்து விசாரிப்பதாக தெரிவித்துள்ளது.

சம்பவத்தின் காணொளியை ஆய்வு செய்துள்ளோம் என்றும், விசாரணை நிலுவையில் இருப்பதால் ஓட்டுநர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்றும் SMRT பேருந்து இயக்குநர் திரு லீ யோங் ஹெங் கூறினார்.

மேலும், பாதுகாப்பு எங்களுக்கு முன்னுரிமை என்றும் கூறியுள்ளார்.

அப்பர் புக்கிட் தீமா சாலையில் லாரி விபத்து – 10 பேர் மருத்துவமனையில் அனுமதி