சிங்கப்பூரில் இன்று காலை தாமதமான SMRT ரயில் சேவை.!

SMRT train service delayed
Pic: SMRT/FB

சிங்கப்பூரில் இன்று காலையில் (ஜூலை 29) மக்கள் அதிகமாக கூட்டம் கூடும் நேரத்தில் ரயிலில் ஏற்பட்ட கோளாறு காரணமாக போக்குவரத்தில் பெரிதும் தாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து SMRT நிறுவனம் இன்று காலை 9 மணியளவில் அதன் சமூக ஊடகப் பக்கங்களில் தாமதம் குறித்து பயணிகளுக்கு தகவல் கொடுத்தது.

செல்லுபடியாகும் “Work pass” இல்லாமல் 8 ஆண்டுகள் வேலை – நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

முதலில் வெளியான சமூக வலைதள பதிவில், பயணிகளுக்கு கால்டெகோட் மற்றும் கென்ட் ரிட்ஜ் இடையே 30 நிமிட பயண நேரம் அதிகரிக்கும் என கூறப்பட்டது.

பின்னர், வெளியான பதிவில் ரயில் சேவைகள் மேலும் தாமதமாகும் என கூறப்பட்டது. காலை 10 மணி அளவில் வெளியான பதிவில் கால்டெகாட் மற்றும் கென்ட்ரிட்ஜ் இடையேயான ரயில் சேவைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும், அந்த பதிவில் பிஷனுக்கும், ஹார்பர்ஃபிரண்டிற்கும் இடையில் இலவச பேருந்து சேவைகள் வழக்கம் போல் கிடைக்கின்றன என்றும், கால்டெகோட் மற்றும் கென்ட்ரிட்ஜ் இடையே ஒரு ரயில் சேவையும் உள்ளது என்றும் தெரிவித்தது.

கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி.!