கிருமித்தொற்று இல்லை என்று அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதி.!

Westlitejuniper dorm no Covid
Pic: Google Maps

சிங்கப்பூரில் உள்ள Westlite Juniper தங்கும் விடுதியில் மீதமுள்ள வெளிநாட்டு ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் கிருமித்தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்கள் மீண்டும் வேலைக்கு திரும்பியுள்ளதாக மனிதவள அமைச்சகம் (MOM) தெரிவித்துள்ளது.

Westlite Juniper தங்கும் விடுதியில் நேற்று முன்தினம் அங்கு வசிக்கும் 9 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த விடுதி நோய்த்தொற்று குழுமமாக அறிவிக்கப்பட்டது.

மின்- சிகரெட்டுகள் சட்டவிரோதமாக இணையத்தில் விற்பனை- 13 பேருக்கு அபராதம்!

Westlite Juniper தங்கும் விடுதியில் வழக்கமாக மேற்கொள்ளப்படும் பரிசோதனைகளில் கிருமித்தொற்றுக்கு ஆளான முதல் நபர் அடையாளம் காணப்பட்டார். அவருடன் நெருக்கமாக இருந்த 6 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டது. பின்னர் மேலும் இருவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

குழுமத்தில் உள்ள 9 பேரிடமும் நோய்த்தொற்றுக்கான அறிகுறிகள் ஏதும் தென்படவில்லை என்றும், அவர்கள் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கிருமித்தொற்று ஏற்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாகவும், வெளிநாட்டு ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மனிதவள அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது

அதிகரிக்கும் கொரோனா: துறைமுகங்களில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்.!