தளர்த்தப்படும் கட்டுப்பாடுகள்: சமூக ஒன்றுகூடலில் அதிக நபர்கள் பங்கேற்க அனுமதி!

Social gatherings 5 allowed
Pic: Mothership

சிங்கப்பூரில் வருகின்ற 10ம் தேதி முதல், முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 5 பேர் வரை சமூக ஒன்றுகூடல்களில் கலந்து கொள்ளலாம் என அமைச்சகளுக்கு இடையிலான பணிக்குழு இன்று (06-08-2021) அறிவித்துள்ளது.

கிருமித்தொற்றுக்கு எதிரான பாதுகாப்பு நிர்வாக நடைமுறைகள் இரண்டு கட்டங்களாக தளர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலை அனுமதி அட்டை வைத்திருப்பவர்கள் சிங்கப்பூருக்கு வர அனுமதி.!

முதல் கட்ட நடவடிக்கைகள் வருகின்ற 10ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் பின்னர், நிலைமை சீராக இருந்தால் 2ம் கட்ட நடவடிக்கைகள் 19ம் தேதி செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 10ம் தேதி முதல் வீடுகளுக்கு அதிகபட்சமாக ஐந்து பேர் வரை செல்லலாம் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஒன்றுகூடல்களில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 5 பேர் வரை ஈடுபடலாம் என்றும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் இருவர் மட்டுமே ஈடுபட முடியும் என கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் அதிகபட்சமாக நாள் ஒன்றுக்கு 2 ஒன்றுகூடல்களில் மட்டும் பங்கேற்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பு: Yuhua சந்தை மற்றும் ஹாக்கர் மையம் மூடல்.!