ஏப்ரல், மே மாதங்களில் மூடப்படும் சில வடகிழக்கு வழித்தட நிலையங்கள்..!

(Photo: Wikipedia)

வடகிழக்கு வழித்தடத்திலுள்ள சில MRT ரயில் நிலையங்களில் மாற்று வேலைகள் நடைபெறுவதால் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சில நாட்கள் மூடப்படும் என்று SBS டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வருகின்ற வாரம் தொடங்கி ஏப்ரல் 9, 10, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் என்இ12 சிராங்கூனுக்கும், என்இ17 பொங்கோலுக்கும் இடையிலான நிலையங்கள் இரவு 11 மணிக்கு முன்னரே மூடப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் பயணிகள் விமானத்திற்கு தடை விதித்த நகரம்

வடகிழக்கு தடத்தில் மீதமுள்ள என்இ1 மற்றும் என்இ12 க்கும் இடையிலான சேவைகள் சுமார் 10 நிமிட இடைவெளியில் நடக்கும் என்றும் SBS நிறுவனம் தெரிவித்துள்ளது.

சிராங்கூனுக்கும், பொங்கோலுக்கும் இடையிலான பயணங்களில் பாதிக்கப்படும் பயணிகளுக்கு பேருந்து சேவை 21 செயல்படும் என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

அதிக பயணிகள் பயணம் செய்யும் வகையில் சிராங்கூன் முதல் ஹர்பர்ஃபிராண்ட் வரையுள்ள நிலையங்களுக்கு தெற்குப்புறமாக செல்லும் ரயில்கள் அதிகாலை 12:15 வரை அதிகரித்துள்ளதாக SBS டிரான்சிட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 23, 24 மற்றும் மே 7, 8 ஆகிய தேதிகளில் என்இ1 ஹர்பர்ஃபிராண்ட்க்கும் என்இ6 டோபி காட்டுக்கும் இடையிலான நிலையங்கள் முன்னதாகவே மூடப்படும் என்றும், என்இ6 டோபி காட்டுக்கும் என்இ17 பொங்கோலுக்கும் இடையிலான ரயில் சேவைகள் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதிக நம்பிக்கை வாய்ந்த ரயில் சேவை: SBS ட்ரான்சிட் நிறுவனத்திற்கு S$30 மில்லியன் வெகுமதி!